விவசாயத்துறை அமைச்சகம்

கன்று வீச்சு நோய் தடுப்பு மருந்துக்காக இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஹெஸ்டர் பயோ சயின்சஸ் இடையே தொழில்நுட்ப உரிம ஒப்பந்தம் கையெழுத்தானது

Posted On: 23 SEP 2020 3:57PM by PIB Chennai

ஐ சி ஏ ஆர் - இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் (ஐ வி ஆர் ஐ) உருவாக்கியுள்ள

கன்று வீச்சு நோய் தடுப்பு மருந்துக்கான (Brucella abortus S19Δ per vaccine) தொழில்நுட்ப உரிம ஒப்பந்தம் மெய்நிகர் முறையில் 2020 செப்டம்பர் 20 அன்று கையெழுத்தானது.

ஐ சி ஏ ஆர் - ஐ வி ஆர் ஐ மற்றும் ஹெஸ்டர் பயோ சயின்சஸ் இடையே தொழில்நுட்ப உரிம ஒப்பந்தம் கையெழுத்தானது. தேசிய கன்று வீச்சு நோய் இந்த தடுப்பு திட்டத்துக்கு இந்த தடுப்பு மருந்து பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ சி ஏ ஆர் - ஐ வி ஆர் ஐ இயக்குநர் திரு ஆர் கே சிங், ஹெஸ்டர் பயோ சயின்சஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் திரு ராஜீவ் காந்தி, உயிரி தொழில்நுட்பவியல் தொழில் ஆராய்ச்சி உதவிக்குழு நிர்வாக இயக்குநர் திருமிகு அஞ்சு பல்லா, அக்ரினோவெட் இந்தியா லிமிடெட் தலைமை செயல் அதிகாரி டாக்டர் சுதா மைசூர் ஆகியோரிடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1658171

*

MBS/GB


(Release ID: 1658311) Visitor Counter : 161


Read this release in: English , Urdu