எஃகுத்துறை அமைச்சகம்

எஃகு இறக்குமதியை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை: அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான் தகவல்

Posted On: 21 SEP 2020 3:22PM by PIB Chennai

மத்திய எஃகுத் துறை அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான் மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

எஃகு இறக்குமதியை குறைக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

எஃகு இறக்குமதிக்கு முன்கூட்டியே பதிவு செய்வதைக் கண்காணிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் எஃகுவின் தரத்தை அறியவும், நாட்டின் உள்நாட்டு உற்பத்தியைத் திட்டமிடுவதும் இதன் நோக்கமாகும்.

நாட்டில் தரமான எஃகு கிடைப்பதை உறுதி செய்யவும், தரமற்ற எஃகு இறக்குமதியைத் தடுத்து நிறுத்துவதற்கும்  எஃகு தர கட்டுபாடு உத்தரவுகள் வழங்கப்படுகின்றன.

தரமான எஃகுப் பொருட்கள் உற்பத்திக்காக எஃகுத் தொகுப்புகள்  உருவாக்குவதை ஊக்குவிக்க திட்டக் கொள்கைகள் வகுக்கப்பட்டன. 

பொதுத்துறை நிறுவனமான இந்திய எஃகு ஆணையம்(செயில்) இந்தாண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 4.835 மெட்ரிக் டன் எஃகு உற்பத்தி செய்தது.

மற்றொரு பொதுத்துறை எஃகு நிறுவனமான, ராஷ்ட்ரிய இஸ்பாத் நிகாம் லிமிடெட் 1.153 மெட்ரிக் டன் எஃகுவை உற்பத்தி செய்தது.

நாடு முழுவதும் உள்ள 914 எஃகு ஆலைகள் இந்தாண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரை 2,50,59,100 டன் எஃகு உற்பத்தி செய்தன.

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1657247



(Release ID: 1657333) Visitor Counter : 88


Read this release in: English , Manipuri , Punjabi