தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
அடல் பிமித் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் வேலை இல்லாதோர் பயன்களை அடைவதற்கு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான அறிவுறுத்தல்களை இஎஸ்ஐசி வெளியிட்டுள்ளது
Posted On:
17 SEP 2020 6:02PM by PIB Chennai
ஊழியர் மாநில காப்பீட்டு நிறுவனம் இஎஸ்ஐசி, பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், அண்மையில் விரிவாக்கப்பட்ட அடல் பிமித் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ், நிவாரணம் பெறுவதற்கு விண்ணப்பங்களை தாக்கல் செய்வதற்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. வேலைகளை இழந்த இஎஸ்ஐ உறுப்பினர்களுக்கு இதன் மூலம் நிவாரணம் வழங்கப்படுகிறது. கேட்பு விண்ணப்பங்களை www.esic.in என்னும் வலைதளத்திலும், பிரமாண உறுதிமொழி, ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு விவரம் ஆகியவற்றுடன் குறிப்பிட்ட இஎஸ்ஐ கிளை அலுவலகத்தில் நேரடியாகவோ, அஞ்சல் மூலமோ தாக்கல் செய்யலாம்.
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை இணையமைச்சர் ( தனிப்பொறுப்பு) திரு சந்தோஷ் குமார் கங்குவார் தலைமையில் இயங்கும் இஎஸ்ஐ, அடல் பிமித் கல்யாண் யோஜனா திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு அதாவது, 2020 ஜூலை 1 முதல் 2021 ஜூன் 30 வரை நீட்டிக்க முடிவு எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், வழங்கப்படும் வேலை இல்லாதோர் நிவாரணத்தை, சம்பளத்தில் 25 சதவீதம் என்பதை 50 சதவீதமாக உயர்த்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 முடக்கம் தொடர்பாக வேலை இழந்த, காப்பீடு செய்த தொழிலாளர்கள் இதனைப் பெறுவதற்கான தகுதி நிபந்தனைகளும் தளர்த்தப்பட்டுள்ளன.
(Release ID: 1655845)
Visitor Counter : 163