வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
2020 ஆகஸ்ட் மாதத்திற்கான நாட்டின் மொத்த விலை குறியீட்டு எண்கள்
प्रविष्टि तिथि:
14 SEP 2020 12:00PM by PIB Chennai
நாட்டின் 2020, ஆகஸ்ட் மாதத்திற்கான மொத்த விலை குறியீட்டு எண்களை(தற்காலிகம்) மற்றும் ஜூன் மாதத்திற்கான மொத்த விலை குறியீட்டு எண்களை(இறுதி) மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக வளர்ச்சி துறையின் பொருளார ஆலோசகர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
மொத்தவிலை குறியீட்டு எண்களின் (WPI) தற்காலிக பட்டியல் ஒவ்வொரு மாதம் 14ம் தேதி அல்லது அதற்கு அடுத்த நாள் வெளியிடப்படுகிறது. அடுத்த 10 வாரங்களுக்கப்பின் இறுதி செய்யப்பட்ட மொத்தவிலை குறியீட்டு எண்கள் வெளியிடப்படும்.
பணவீக்கம்
மாதாந்திர WPI- ஐ அடிப்படையில் ஆண்டு பணவீக்க விகிதம் ஆகஸ்ட் மாதத்தில் 0.16% (தற்காலிகம்) என்ற அளவில் இருந்தது. இது கடந்தாண்டு இதே காலத்தில் 1.17%-மாக இருந்தது.
பல பொருட்களின் மொத்த விலை குறியீடுகளின் பட்டியலை கீழ்கண்ட இணைப்பில் பார்க்கவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1653939 –
------
(रिलीज़ आईडी: 1653958)
आगंतुक पटल : 206