ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

பஞ்சாபில் உள்ள தேசிய உர நிறுவனத்தின் ஆலையை மத்திய அமைச்சர் திரு மன்சுக் மண்டாவியா பார்வையிட்டார்

प्रविष्टि तिथि: 13 SEP 2020 5:23PM by PIB Chennai

பஞ்சாப் மாநிலம் நங்காலில் உள்ள தேசிய உர நிறுவனத்தின் (என் எஃப் எல்) ஆலையை மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் இணை அமைச்சர் திரு மன்சுக் மண்டாவியா  இன்று பார்வையிட்டார்.

நிறுவனத்தின் வளர்ச்சியை ஆய்வு செய்த அவர், நாட்டின் உரத் தேவையை பூர்த்தி செய்வதற்காக அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகளை பற்றி கேட்டறிந்தார்.

ஆலையின் உற்பத்தி செயல்பாடுகளைப் பற்றி தெரிந்துகொள்ள அமைச்சர் மிகவும் ஆர்வம் காட்டினார். கட்டுப்பாட்டு அறைகளை பார்வையிட்ட அமைச்சர் பணியாளர்களிடம் உரையாடினர்.

40 ஆண்டு காலமாக செயல்பட்டு வரும் ஆலையின் சிறந்த உற்பத்தித் திறனை திரு மண்டாவியா பாராட்டினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1653794

************


(रिलीज़ आईडी: 1653952) आगंतुक पटल : 180
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Punjabi