இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
இந்திய விளையாட்டு ஆணையம் மும்பையில் நடத்தும் பிட் இந்தியா சுதந்திர ஓட்டத்தின் பலன்களைப் பற்றி பேட்மிண்டன் வீரர் சிராக் ஷெட்டி எடுத்துரைத்தார்
Posted On:
11 SEP 2020 9:08PM by PIB Chennai
மும்பையில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையம், பேட்மிண்டன் வீரர் சிராக் ஷெட்டியுடன் இணைம் மூலமான உரையாடல் ஒன்றை வெள்ளிக்கிழமை அன்று நடத்தியது.
கடந்த மாதம் அர்ஜுனா விருதை மெய்நிகர் நிகழ்ச்சி மூலம் பெற்ற சிராக் ஷெட்டி, இந்திய விளையாட்டு ஆணையம் மும்பையில் நடத்தும் பிட் இந்தியா சுதந்திர ஓட்டத்தின் பலன்களைப் பற்றி கலந்துரையாடலின் போது எடுத்துரைத்தார்.
"உடல் நலத்துக்கு மட்டுமில்லாமல், மன நலனுக்கும் இது ஒரு சிறந்த பயிற்சி ஆகும். பொதுமக்கள் இதில் அதிக அளவில் கலந்து கொண்டு, இந்த ஓட்டத்தை ஒரு வெற்றிகரமான நிகழ்வாக ஆக்க வேண்டும். ஓடுவதால் ஏற்படும் பலன்கள் மிக அதிகம்," என்றார்.
"ஓட்டத்துக்குப் பின் சோர்வாகி விடுவோம் என்று பலரும் எண்ணுகிறார்கள். மாறாக, ஓட்டப் பயிற்சிக்கும் பின்பு தான் நான் இன்னும் சக்தியும், புத்துணர்ச்சியும் பெற்றதாக எண்ணுகிறேன்," என்று சிராக் ஷெட்டி கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1653460
(Release ID: 1653583)
Visitor Counter : 97