மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
புதிய கல்விக் கொள்கை 2020-ஐ முன்னெடுத்துச் செல்லும் உறுதியோடு '21-ஆம் நூற்றாண்டில் பள்ளிக்கல்வி' என்னும் இரண்டு நாள் மாநாடு நிறைவுற்றது
Posted On:
11 SEP 2020 6:46PM by PIB Chennai
புதிய கல்விக் கொள்கை 2020-ஐ முன்னெடுத்துச் செல்லும் உறுதியோடு '21-ஆம் நூற்றாண்டில் பள்ளிக்கல்வி' என்னும் இரண்டு நாள் மாநாடு நிறைவுற்றது. இதில், பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார்.
மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால், மத்திய கல்வி இணை அமைச்சர் திரு சஞ்சய் தோத்ரே, உயர்கல்வி செயலாளர் திரு அமித் காரே மற்றும் உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
பல்வேறு தலைப்புகளில் நிபுணர்கள் கலந்து கொண்ட விவாதங்கள் இந்த மாநாட்டில் நடைபெற்றன. இதில் பேசியவர்கள், நாட்டை கல்வி மற்றும் இதர துறைகளில் முன்னெடுத்து சொல்வதற்கான திட்டங்கள் புதிய கல்விக் கொள்கை மூலம் வகுக்கப்பட்டுள்ளன என்றும், அதை அனைவரும் இணைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
புதிய உயர்நோக்கங்களை நிறைவு செய்வதாகவும், புதிய இந்தியாவில் புதிய வாய்ப்புகளை அளிப்பதாகவும் தேசிய கல்விக் கொள்கை இருக்கும் என்றும் அவர்கள் கூறினர்.
மாநாட்டில் பேசிய பிரதமர், இந்தியாவின் 21வது நூற்றாண்டுக்குப் புதிய திசையைக் காட்டுவதாக தேசிய கல்விக் கொள்கை இருக்கும் என்று கூறினார். நாட்டின் எதிர்காலத்துக்கு அடித்தளமிடும் காலத்தில் நாம் இருக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த மூன்று தசாப்த காலங்களில் நமது செயல்பாடுகளில் எதுவுமே பழைய நிலையிலேயே இல்லாமல் மாறியுள்ளன என்ற நிலையில், நமது கல்வித் திட்டம் மட்டும் பழைய நடைமுறையிலேயே இருக்கிறது என்றார் அவர்.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1653399
(Release ID: 1653439)
Visitor Counter : 148