அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கொரோனா வைரசுக்கு எதிரான பிறபொருளெதிரிகள் குறித்த தெளியவியல் சோதனை லக்னோவில் உள்ள சிஎஸ்ஐஆர்-சிடிஆர்ஐ-யில் நடந்து வருகிறது

Posted On: 11 SEP 2020 5:07PM by PIB Chennai

மனிதர்களை ஈடுபடுத்தி கொரோனா வைரசுக்கு எதிரான பிறபொருளெதிரிகள் (ஆன்டிபாடிஸ்) குறித்த தெளியவியல் (சீராலஜிக்கல்) சோதனையை லக்னோவில் உள்ள மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் (சிஎஸ்ஐஆர்-சிடிஆர்ஐ-யில்) செய்து வருகிறது,

செப்டம்பர் 9 முதல் 11 வரை இந்த சோதனை நடைபெறுகிறது. சிஎஸ்ஐஆர்-சிடிஆர்ஐ-யின் முதன்மை விஞ்ஞானிகளான டாக்டர் சுசந்தா கர் மற்றும் டாக்டர் அமித் லாஹிரி கூறுகையில், இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் பரிசோதனைகள் என்பது அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றும் இத்தகையோரிடம் நெருக்கமான தொடர்பில் இருந்தவர்களுக்கு மட்டுமே செய்யப்பட்டு வருகின்றன என்றனர்.  

சமுக பரிசோதனை இன்னும் தொடங்கப்படவில்லை என கூறிய அவர்கள், பல்வேறு நாடுகளில் இருந்து வெளியாகியுள்ள அறிக்கைகளை வைத்து பார்க்கும் பொது, அறிகுறிகளே இல்லாமல் நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் அதிகளவில் இருப்பது தெரிய வந்துள்ளது என்றனர். எனவே, இந்த நோயின் சுமை இன்னும் அதிக அளவில் இருக்கக் கூடும்.

நோய்த்தொற்று ஏற்பட்ட ஒருவரது உடலில், அவரை தொற்றிலிருந்து மேலும் பாதுகாப்பதற்காக பிறபொருளெதிரிகள் உருவாகும் என்று டாக்டர் சுசந்தா கர் மற்றும் டாக்டர் அமித் லாஹிரி கூறினர். இதைப்பற்றிய சோதனையை தான் சிஎஸ்ஐஆர்-சிடிஆர்ஐ செய்து வருகிறது,  

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1653349


(Release ID: 1653365) Visitor Counter : 172