பாதுகாப்பு அமைச்சகம்

கொச்சி கடற்படை தளத்தில், பிளாஸ்டிக் கழிவுகளைக் கையாளும் வசதி தொடக்கம்

प्रविष्टि तिथि: 29 AUG 2020 5:54PM by PIB Chennai

கொச்சி கடற்படைத் தளத்தில்  அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகளைக் கையாளும் வசதியை, தென்பிராந்திய கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் அனில் கே.சாவ்லா, பி.வி.எஸ்.எம்., ஏ.வி.எஸ்.எம்., என்.எம்., வி.எஸ்.எம்., ஏ.டி.சி. 29 ஆகஸ்ட், 2020 அன்று தொடங்கி வைத்தார்.   கொச்சியில் உள்ள தென்பிராந்திய கடற்படைத் தளத்தின் சுற்றுச்சூழல் முன்முயற்சிகளை எடுத்துரைக்கும் “கெலைடாஸ்கோப் – இறக்கைகள் உடைய நண்பர்கள் @கதாரிபாக்”  என்ற தலைப்பிலான பறவைகள் புத்தகம் ஒன்றையும், இந்த நிகழ்ச்சியில் அவர் வெளியிட்டார். 

கொச்சி கப்பல் கட்டும் தளத்தின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ்,  எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகத்தின்  வாயிலாக, ஸ்டீல் இன்டஸ்ட்ரீஸ் கேரளா லிமிடெட் நிறுவனத்தால், சுமார் ரூ.46 லட்சம் செலவில் இந்த முன்னோடித் திட்டம், வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது.  ஒரு மணி நேரத்திற்கு சுமார் 150 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் திறன் கொண்ட இந்தப் புதிய வசதியை, தென்பிராந்தியக் கடற்படை சார்பில், ஐ.என்.எஸ்.வெந்துருத்தி கடற்படை தளம் நிர்மாணித்து, செயல்படுத்தி வருகிறது.  

                                                                                            *****


(रिलीज़ आईडी: 1649766) आगंतुक पटल : 145
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी