மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

உருது மொழியை மேம்படுத்துவதற்கான தேசிய கவுன்சில் (என்சிபியூஎல்) ஏற்பாடு செய்திருந்த உலக உருது மாநாட்டின் தொடக்க அமர்வில் மத்திய கல்வி அமைச்சர் உரையாற்றினார்

Posted On: 27 AUG 2020 11:15PM by PIB Chennai

உருது மொழியை மேம்படுத்துவதற்கான தேசிய கவுன்சில் (என்.சி.பி.யூ.எல்) இன்று புதுதில்லியில் ஏற்பாடு செய்திருந்த இரண்டு நாள் உலக உருது மெய்நிகர் மாநாட்டின் தொடக்க அமர்வில் மத்திய கல்வி அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்' உரையாற்றினார் .

இந்நிகழ்ச்சியில் பேசிய திரு. பொக்ரியால், உருது மொழி என்பது, கலப்பு கலாச்சாரம் மற்றும் இடைக்கால நம்பிக்கையின் பிணைப்புகளால் உருவானது மட்டுமல்ல, மனிதநேயம், இதயம் மற்றும் ஆத்மா ஆகியவற்றின் மொழியாகும் என்பதை வலியுறுத்தினார். உருது மொழியின் மிகச்சிறந்த தத்துவம், அதன் உள்ளடக்கிய நெறிமுறைகள் மற்றும் ஆக்கபூர்வமான தன்மை ஆகியவற்றைக் கொண்டாடும்பொருட்டு, இந்த வெபினார் நடத்தப்படுவதாக அவர் கூறினார் . இன்று என்விபியுல் உலகின் மிகப்பெரிய உருது நெட்வொர்க்கிங் மையமாக மாறிவிட்டது என்று அறிவிப்பதில் தாம் பெருமிதம் கொள்வதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார். பிரதமர் திரு.நரேந்திர மோடி, இந்திய கலாச்சார பாரம்பரியத்தை நேசிப்பவர் என்று குறிப்பிட்ட திரு.பொக்ரியால், உலகம் முன்னேறி வருவதில் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும்,, இந்த சூழலில், நவீன தொழில்நுட்பத்தின் உதவியின்றி எந்த மொழியும் தனது வாசகர்களுடன் வலுவான தொடர்பை ஏற்படுத்த முடியாது என்றும் `கூறினார். அதனால்தான் என்.சி.பி.யூ.எல், தொழில்நுட்பத்தின் உதவியுடன் இன்று புதிய உச்சங்களைத் தொடுகிறது. அதன் தொடர்ச்சியான பிரபலத்திற்கு, மிகுதியான உருது வலைத்தளங்களே சான்றாகும், என்றார் அவர்.

மத்திய கல்வி அமைச்சர் மேலும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு பேசியபோது. உருது எழுத்தாளர்களின் இலக்கியம் மற்றும் படைப்பு சேவைகளை ஊக்குவிக்கும் வகையில் அடுத்த ஆண்டு முதல் உருது கவுன்சில் சார்பில், உருது மொழியில் சிறந்த முக்கிய பிரமுகர்களான அமீர் குஸ்ரோ, மீர்சா காலிப், ஆகா ஹஷர், ராம் பாபு சக்சேனா மற்றும் தயா சங்கர் நசீம் ஆகியோரின் பெயரில் உருது எழுத்தாளர்கள் மற்றும் இலக்கியவாதிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு,வுவிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்

******



(Release ID: 1649183) Visitor Counter : 221


Read this release in: English , Urdu , Manipuri