புவி அறிவியல் அமைச்சகம்
ஒடிசாவில் அடுத்த இரு தினங்களுக்கு கனமழை
Posted On:
25 AUG 2020 2:23PM by PIB Chennai
புதுதி்ல்லியில் உள்ள இந்திய வானிலைத் துறையின் தேசிய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளதாவது:
வடக்கு வங்காள விரிகுடா மற்றும் அண்டைப் பகுதிகளில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது, அடுத்த 4-5 தினங்களில் மேற்கு – வடமேற்காக நகரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் ஒடிசா, மேற்கு வங்க கங்கைக் கரையோரப் பகுதி, ஜார்க்கண்ட் ஆகியவற்றில் வரும் 28-ம் தேதி வரை கனமழை பரவலாகப் பெய்யக் கூடும். சத்தீஷ்கர், மத்தியப்பிரதேசம், மேற்கு ராஜஸ்தானில் இம்மாதம் 26 முதல் 28ம் தேதி வரையிலும் கனமழை பெய்யலாம். ஆகஸ்டு 25 மற்றும் 26 தேதிகளில் ஒடிசாவிலும், 27-ம் தேதியன்று சத்தீஷ்கரிலும் அதி கனமழை பெய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரிவான தகவல்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1648448
------
(Release ID: 1648485)
Visitor Counter : 223