நிதி அமைச்சகம்
வருமான வரித்துறை போபாலில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டது
Posted On:
21 AUG 2020 8:52PM by PIB Chennai
வருமான வரித்துறை 20-08-2020 அன்று போபாலில் பல்வேறு இடங்களில் தேடுதல் மற்றும் கைப்பற்றுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டது.
தேடுதல் நடவடிக்கைக்கு உள்ளான குழுக்களில் ஒரு குழுவின் முக்கிய நபர் வளையல் கடை நடத்தி வந்தார். மற்றொரு நபர் வீடு கட்டி தருபவர் / வீட்டுவசதி மேம்பாட்டாளர் ஆவார். இவரே ஒரு கிரிக்கெட் அகாடமியும் நடத்தி வருகிறார். தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் ரூ.105 கோடி சந்தை மதிப்புள்ள காலிமனை, .பிளாட்டுகள் மற்றும் விவசாய நிலங்கள் போன்ற சுமார் 100 சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள் கண்டறியப்பட்டன. கடந்த 6 ஆண்டுகளில் இந்த சொத்துக்களை வாங்குவதற்கு கணக்கில் வராத பணம் பெருமளவில் பயன்படுத்தப்பட்டுள்ளதை ஆவணங்கள் எடுத்துக் காட்டுகின்றன. பெரும்பான்மையான சொத்துக்கள் சாதாரண நபர்களின் பெயர்களில் இருந்தன. இதன் மூலம் இந்தச் சொத்துக்கள் பினாமி சொத்துக்கள் என்பது தெரிய வருகிறது. தேடுதலின் போது ரூ.1.8 கோடி மதிப்புள்ள ரொக்கப்பணமும் நகைகளும் கைப்பற்றப்பட்டன.
மேலும் தேடுதலின் போது சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சிலர் பங்குதாரர்கள் மற்றும் கூட்டாளிகளாக இருந்ததை வெளிப்படுத்தின. அதாவது பினாமி சொத்துக்கள் இவர்களின் பெயர்களில் இருக்கின்றன.
(Release ID: 1648036)
Visitor Counter : 154