எரிசக்தி அமைச்சகம்
கோவிட்-19 ஏற்படுத்திய நிதி அழுத்தத்தைத் தொடர்ந்து மின்சாரத் துறை நிலுவைத் தொகைகளுக்கு நிதியை வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
Posted On:
19 AUG 2020 4:29PM by PIB Chennai
உஜ்வால் விநியோக நிறுவனங்கள் உறுதியளிப்புத் திட்டத்தின் (UDAY) கீழ், கடந்த வருட வருவாயில் 25 சதவீதத்துக்கு மேல் பணி மூலதன உச்சவரம்பாக வைத்திருக்கும் மின்சார விநியோக நிறுவனங்களுக்கு கடன்களை வழங்க மின்சார நிதிநிறுவனம் (PFC) மற்றும் ஊரக மின்சாரமயமாக்கல் நிறுவனம் (REC) ஆகியவற்றுக்கு ஒரு முறை தளர்வை பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது.
மின்சாரத்துறைக்கு நிதி ஓட்டத்தை வழங்கவும், விநியோக நிறுவனங்களுக்கு மாநில அரசுகள் கட்டணங்களைச் செலுத்துவதை உறுதி செய்யவும் இந்த ஒரு முறைத் தளர்வு உதவும்.
பின்னணி:
கோவிட்-19 உலகளாவிய பெருந்தொற்றும், அதைத் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட நாடு தழுவிய பொதுமுடக்கமும் மின்சாரத் துறையின் நிதிச் சிக்கல்களை அதிகப்படுத்தின. பயன்படுத்திய மின்சாரத்துக்கு மக்களால் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதால், மின்சார விநியோக நிறுவனங்களின் வருமானம் பாதிக்கப்பட்டது. அதே சமயம், அத்தியாவசிய சேவை என்பதால், மின்சார விநியோகம் சீராக பராமரிக்கப்பட்டது. மின்சாரப் பயன்பாடும் கணிசமாகக் குறைந்தது. பொருளாதாரச் செயல்பாடுகளும், மின்சாரத் தேவையும் வேகமெடுக்க சிறிது நேரம் எடுக்கும் என்பதால், மின்சாரத் துறையின் நிதிநிலைமை மேம்பட சிறிது காலம் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மின்சார விநியோகம் தொடர்ந்து நடைபெற மின்சாரத்துறைக்கு நிதி வசதிகளை அளிக்க வேண்டிய உடனடித் தேவை இருக்கிறது.
****
(Release ID: 1646995)
Visitor Counter : 189