நித்தி ஆயோக்
நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு ஸ்டெப்-அப் பாடத் தொகுப்புகளை நிதிஆயோக்கின் அடல் புத்தாக்க மிஷன், நாஸ்காம் தொடங்கி உள்ளன
Posted On:
14 AUG 2020 9:01PM by PIB Chennai
பள்ளிக்கூடங்களுக்கு செயற்கை நுண்ணறிவு பற்றிய ” (Artificial Intelligence (AI) modules to schools through ‘ATL AI) பாடத்தொகுப்புகள்”, மூலமாக எடுத்துச் செல்லும் பிரத்யேக முன் முயற்சியை வெற்றிகரமாக தொடங்கியப் பிறகு நிதிஆயோக்கின் அடல் புத்தாக்க மிஷன் இப்பொழுது நாஸ்காமுடன் ஒருங்கிணைந்து சுதந்திரதினத்தின் முந்தைய நாளில் மாணவர்களுக்கான “ஏடிஎல் ஏஐ முடிகிவிடப்பட்டப் பாடத்தொகுப்புகளை” தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் பள்ளிக்கூடங்களில் செயற்கை நுண்ணறிவுக் கல்வி மற்றும் புத்தாக்கத்திற்கு உந்துதல் தரும் வகையில் இது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்திய வகுப்பறைகளுக்கு செயற்கை நுண்ணறிவை எடுத்துச் செல்லும் அடுத்தப் படிநிலையாக இந்தப் பாடத்தொகுப்பு உள்ளது. இது இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்ட ஏஐ அடிப்படைப் பாடத்தொகுப்பைத் தொடர்ந்து அடுத்த கட்டத்திற்கான பாடத்தொகுப்பாக அமைகிறது. ஏஐ அடிப்படைப் பாடத்தொகுப்பு வழியாக செயற்கை நுண்ணறிவுத் துறையின் அடிப்படைகளை நன்கு தெரிந்து கொண்ட பிறகு மாணவர்கள் இது தொடர்பான தங்களது அறிவை விரிவாக்கிக் கொள்ள விரும்பினால் அவர்கள் தாங்களாகவே கற்றுக்கொள்ளும் வகையில் விரிவான விளக்கங்களை இந்த ஏஐ ஸ்டெப்-அப் பாடத்தொகுப்பு வழங்குகிறது.
இந்தப் புதிய அறிமுகத்தோடு நேரடியான செயல்திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் மூலமாக இந்த ஸ்டெப்-அப் பாடத்தொகுப்பு செயற்கை நுண்ணறிவை ஆழமாகப் புரிந்து கொள்ள ஊக்குவிக்கிறது. இதனை நிஜ உலகிலும் பயன்படுத்தலாம். ஊரகம் மற்றும் நகரப்பகுதிகளில் உள்ள அனைத்து மாணவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் இந்தப் பாடத்தொகுப்பானது கவர்ச்சிகரமான கிராஃபிக் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் ஸ்டெப்-அப் பாடத்தொகுப்புக்கு முந்தைய அறிவு ஏதும் தேவை இல்லை. இது இன்ட்டராக்டிவ் உபகரணங்கள் மற்றும் செயல்பாடுகளை பயன்படுத்தி அடிப்படையில் இருந்தே மாணவர்களுக்குக் கருத்தாக்கங்களை அறிமுகப்படுத்துகிறது. இதனால் மாணவர்களின் கவனம் சிதைவடையாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது. மேலும் இந்தப் பாடத்தொகுப்பின் குறிக்கோள் என்பது மாணவர்களுக்கு சவாலை முன்வைத்து வரும் ஆண்டுகளில் வாய்ப்புகளை உருவாக்குவதே ஆகும். அதாவது மாணவர்களை மாற்றத்தை ஏற்படுத்துபவர்களாகவும் புத்தாக்கத்தில் முன்னோடிகளாக ஈடுபடவும் இது செய்யும்.
பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்துவதின் முக்கியத்துவம் குறித்து பேசிய நிதிஆயோக் தலைமைச் செயல் அதிகாரி திரு. அமிதாப் கன்ட் இந்த நாட்டின் எதிர்காலமாக ஏஐ ஸ்டெப்-அப் பாடத்தொகுப்பு இருக்கும் என்று குறிப்பிட்டார். இளைஞர்களை கவனத்தில் கொள்ளும் இந்தப் பாடத்தொகுப்பானது அதனளவில் தனித்தடம் பதிப்பதாக உள்ளது. ”இந்தியா தனது 74வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்த முக்கியமான தினத்தில் இந்த பாடத்தொகுப்பு வெளியிடப்படுகிறது. நிதிஆயோக் உருவாக்கியுள்ள இந்த ஏடிஎல் ஏஐ ஸ்டெப்-அப் பாடத்தொகுப்பை இந்த தேசத்தின் மாணவர்களுக்காக அடல் புத்தாக்க மிஷனின் மூலமாக வெளியிடுவதில் அதிலும் குறிப்பாக சுதந்திர தினத்திற்கு முன்தினத்தில் வெளியிடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நமது குழந்தைகளின் எதிர்காலம் உண்மையில் செயற்றை நுண்ணறிவில்தான் இருக்கிறது. இது அடல் புத்தாக்க மிஷன் மற்றும் நாஸ்காமின் பிரத்யேகமான முயற்சி ஆகும்” என்று குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஏஐ ஸ்டெப்-அப் பாடத்தொகுப்பானது கிடைக்கும். இதனை at https://aim.gov.in/Lets_learn_AI_StepUp_Module.pdf இந்த இணைப்பு மூலமாக பெறலாம்.
(Release ID: 1646183)
Visitor Counter : 260