வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகம்: ஜூலை 2020
Posted On:
14 AUG 2020 6:10PM by PIB Chennai
ஏப்ரல்-ஜூலை 2020-21*-இல் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியின் மதிப்பு (பொருள்கள் மற்றும் சேவைகள் இணைந்து) 141.82 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் இதே காலத்துடன் ஒப்பிடும் போது (-)21.99 சதவீதம் என்னும் விகிதத்தில் எதிர்மறை வளர்ச்சியை இது காட்டுகிறது. ஏப்ரல்-ஜூலை 2020-21*-இல் ஒட்டுமொத்த இறக்குமதியின் மதிப்பு 127.76 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் இதே காலத்துடன் ஒப்பிடும் போது (-)40.66 சதவீதம் என்னும் விகிதத்தில் எதிர்மறை வளர்ச்சியை இது காட்டுகிறது.
குறிப்பு: i) சேவைகள் துறைக்காக இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய தரவுகள் ஜூன் 2020-க்கு உரியவை ஆகும். ஜூலை 2020-க்கன தரவுகள் மதிப்பீடுகளே ஆகும். இந்திய ரிசர்வ் வங்கியின் அடுத்தடுத்த வெளியீடுகளை ஆதாரமாகக் கொண்டு அவை திருத்தப்படும் ii) அடைப்புக்குறிக்குள் இருக்கும் எண்கள் கடந்த வருடம் இதே காலத்துக்கு உரியவை ஆகும்.
I. பொருள்களின் வர்த்தகம்
ஏற்றுமதிகள் (மறு-ஏற்றுமதிகள் உட்பட)
* ஜூலை 2020-இல் ஏற்றுமதிகள் 23.64 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தன. ஜூலை 2019-இன் 26.33 பில்லியன் அமெரிக்க டாலர்களோடு ஒப்பிடும் போது, இது (-) 10.21 சதவீதம் எதிர்மறை வளர்ச்சி ஆகும். இந்திய ரூபாய் மதிப்பில் பார்க்கும் போது, ஜூலை 2020-இல் ஏற்றுமதிகள் ரூ. 1,77,305.79 கோடியாக இருந்தன. ஜூலை 2019-இன் ரூ 1,81,190.34 கோடியோடு ஒப்பிடும் போது, இது (-) 2.14 சதவீதம் எதிர்மறை வளர்ச்சி ஆகும்.
* ஜூலை 2019 உடன் ஒப்பிடும் போது ஜூலை 2020-இல் நேர்மறை வளர்ச்சியைக் கண்ட முக்கிய பொருள்கள் வருமாறு: இதர பருப்புகள் (204.99%), அரிசி (47.99%), இரும்பு தாது (39.61%), எண்ணெய் வித்துகள் (32.61%) எண்ணெய் உணவுகள் (28.44%), இறைச்சி, பால், கோழி (22.14%), பழங்கள், காய்கறிகள் (21.01%), மருந்துகள் (19.53%), காபி (14.27%), பருப்புத் தயாரிப்புகள், இதர பதப்படுத்தப்பட்ட பொருள்கள் (12.92%), பீங்கான் பொருள்கள், கண்ணாடிப் பொருள்கள் (9.72%), பொறியியல் பொருள்கள் (8.46%), பருத்தி நூல்/துணிகள்/தயார் செய்யப்பட்ட உடைகள், கைத்தறி பொருள்கள் உள்ளிட்டவை (7.44%), தரை விரிப்பான் உள்ளிட்ட சணல் தயாரிப்புகள் (6.77%), நெகிழி, லினோலியம் (3.72%) மற்றும் கம்பளம் (1.96%).
* ஜூலை 2019 உடன் ஒப்பிடும் போது ஜூலை 2020-இல் எதிர்மறை வளர்ச்சியைக் கண்ட முக்கிய பொருள்கள் வருமாறு: பெட்ரோலிய பொருள்கள் (-51.54%), விலை உயர்ந்த கற்கள், நகைகள் (-49.61%), தோல், தோல் பொருள்கள் (-26.96%), மனிதனால் உற்பத்தி செய்யப்பட்ட நூல்/துணிகள்/தயார்நிலை உடைகள் (-23.33%), அனைத்து ஜவுளிகளின் தயார்நிலை உடைகள் (-22.09%), முந்திரி (-21.25%), கடல் பொருள்கள் (-20.14%), புகையிலை (-19.49%), மின்னணு சாதனங்கள் (-17.42%), வாசனை பொருள்கள் (-11.38%), மைக்கா, நிலக்கரி, இதர தாதுக்கள், பதப்படுத்தப்பட்ட கனிமங்கள் உள்ளிட்ட இதர கனிமங்கள் (-8.21%), கையால் செய்யப்பட்ட கம்பளி தவிர இதர கைத்தறிப் பொருள்கள் (-6.12%), தேயிலை (-3.97%) மற்றும் இயற்கை, செயற்கை ரசாயனங்கள் (-0.05%).
* ஏப்ரல்-ஜூலை 2020-21 காலகட்டத்தில் ஒட்டுமொத்த ஏற்றுமதியின் மதிப்பு 74.96 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (ரூ 5,66,322.96 கோடி) இருந்தது. ஏப்ரல்-ஜூலை 2019-20-இன் மதிப்பான 107.41 பில்லியன் அமெரிக்க டாலர்களோடு (ரூ 7,45,174.85 கோடி) ஒப்பிடும் போது (-)30.21 சதவீதம் எதிர்மறை வளர்ச்சியை அமெரிக்க டாலர்களிலும், இந்திய ரூபாய் மதிப்பில் (-) 24.00 சதவீதம் எதிர்மறை வளர்ச்சியையும் இது காட்டுகிறது.
* பெட்ரோலியம் சாராத பொருள்கள் மற்றும் விலை உயர்ந்த கற்கள் சாராத நகைகள் ஆகியவற்றின் ஏற்றுமதி ஜூலை 2020-இல் 20.37 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. ஜூலை 2019-இன் 19.70 பில்லியன் அமெரிக்க டாலர்களோடு ஒப்பிடும் போது இது 3.40 சதவீதம் நேர்மறை வளர்ச்சியாகும். பெட்ரோலியம் சாராத பொருள்கள் மற்றும் விலை உயர்ந்த கற்கள் சாராத நகைகள் ஆகியவற்றின் ஏற்றுமதி ஏப்ரல்-ஜூலை 2020-21-இல் 64.29 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. கடந்த வருடம் இதே காலத்தின் 79.81 பில்லியன் அமெரிக்க டாலர்களோடு ஒப்பிடும் போது இது (-) 19.45 சதவீதம் வீழ்ச்சியாகும்.
இறக்குமதிகள்
* ஜூலை 2020-இல் இறக்குமதிகள் 28.47 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (ரூ 2,13,499.56 கோடி) இருந்தது. ஜூலை 2019-இன் இறக்குமதிகளின் மதிப்பான 39.76 பில்லியன்அமெரிக்க டாலர்களோடு (ரூ 2,73,579.91 கோடி) ஒப்பிடும் போது, (-)28.40 சதவீதம் எதிர்மறை வளர்ச்சியை அமெரிக்க டாலர்களிலும், இந்திய ரூபாய் மதிப்பில் (-) 21.96 சதவீதம் எதிர்மறை வளர்ச்சியையும் இது காட்டுகிறது. ஏப்ரல்-ஜூலை 2020-21இன் ஒட்டுமொத்த இறக்குமதிகள் 88.91 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (ரூ 6,71,894.74 கோடி) இருந்தது. ஏப்ரல்-ஜூலை 2019-20-இன் இறக்குமதிகளின் மதிப்பான 166.80 பில்லியன்அமெரிக்க டாலர்களோடு (ரூ 11,57,232.64 கோடி) ஒப்பிடும் போது, (-)46.70 சதவீதம் எதிர்மறை வளர்ச்சியை அமெரிக்க டாலர்களிலும், இந்திய ரூபாய் மதிப்பில் (-) 41.94 சதவீதம் எதிர்மறை வளர்ச்சியையும் இது காட்டுகிறது.
* கடந்த வருடத்தின் இதே மாதத்தோடு ஒப்பிடும் போது ஜூலை 2020-இல் எதிர்மறை வளர்ச்சியைக் கண்ட முக்கிய பொருள்களின் விவரம் வருமாறு:
* நிலக்கரி, கற்கரி, ப்ரிக்வெட்டுகள் உள்ளிட்டவை (-53.76%)
* இயந்திரங்கள், மின்சாரம் & மின்சாரம் சாராத பொருள்கள் (-32.89%)
* பெட்ரோலியம், கச்சாப் பொருள்கள் (-31.97%)
* இயற்கை, செயற்கை ரசாயனங்கள் (-12.22%)
* மின்னணு சாதனங்கள் (-4.31%)
கச்சா எண்ணெய் மற்றும் எண்ணெய் சாராத இறக்குமதிகள்:
ஜூலை 2020-இல் எண்ணெய் இறக்குமதிகள் 6.53 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (ரூ 48,975.09 கோடி) இருந்தன. ஜூலை 2019-இன் 9.60 பில்லியன் அமெரிக்க டாலர்களோடு (ரூ 66,056.77 கோடி) ஒப்பிடும் போது, அமெரிக்க டாலர்களில் 31.97 சதவீதமும், இந்திய ரூபாய் மதிப்பில் 25.86 சதவீதமும் இது குறைவாகும். ஏப்ரல்-ஜூலை 2020-21-இல் எண்ணெய் இறக்குமதிகள் 19.61 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (ரூ 148,234.51 கோடி) இருந்தன. கடந்த வருடம் இதே காலத்தின் 44.45 பில்லியன் அமெரிக்க டாலர்களோடு (ரூ 3,08,455.32 கோடி) ஒப்பிடும் போது, அமெரிக்க டாலர்களில் 55.88 சதவீதமும், இந்திய ரூபாய் மதிப்பில் 51.94 சதவீதமும் இது குறைவாகும்.
* உலக வங்கியிடம் இருக்கும் தகவல்களின் அடிப்படையில், இது தொடர்பான சர்வதேச கச்சா எண்ணெயின் விலை (டாலர்/பீப்பாய்) ஜூலை 2019 உடன் ஒப்பிடும் போது ஜூலை 2020-இல் 33.11 சதவீதம் குறைந்தது.
* ஜூலை 2020-இல் எண்ணெய் சாராத இறக்குமதிகள் 21.94 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (ரூ 1,64,524.47 கோடி) இருந்தன. ஜூலை 2019-இன் 30.16 பில்லியன் அமெரிக்க டாலர்களோடு (ரூ 2,07,522.94 கோடி) ஒப்பிடும் போது, அமெரிக்க டாலர்களில் 27.26 சதவீதமும், இந்திய ரூபாய் மதிப்பில் 20.72 சதவீதமும் இது குறைவாகும். ஏப்ரல்-ஜூலை 2020-21-இல் எண்ணெய் சாராத இறக்குமதிகள் 69.30 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (ரூ 5,23,660.23 கோடி) இருந்தன. கடந்த வருடம் இதே காலத்தின் 122.35 பில்லியன் அமெரிக்க டாலர்களோடு (ரூ 8,48,777.32 கோடி) ஒப்பிடும் போது, அமெரிக்க டாலர்களில் 43.36 சதவீதமும், இந்திய ரூபாய் மதிப்பில் 38.30 சதவீதமும் இது குறைவாகும்.
* ஜூலை 2020-இல் எண்ணெய் சாராத மற்றும் தங்கம் சாராத இறக்குமதிகள் 20.15 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தன. ஜூலை 2019-இன் எண்ணெய் சாராத மற்றும் தங்கம் சாராத இறக்குமதிகளின் மதிப்பான 28.45 பில்லியன் அமெரிக்க டாலர்களோடு ஒப்பிடும் போது, இது 29.15 சதவீதம் எதிர்மறை வளர்ச்சி ஆகும். ஏப்ரல்-ஜூலை 2020-21-இல் எண்ணெய் சாராத மற்றும் தங்கம் சாராத இறக்குமதிகள் 66.82 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தன. கடந்த வருடம் இதே காலத்தின் 109.19 பில்லியன் அமெரிக்க டாலர்களோடு ஒப்பிடும் போது, இது (-) 38.80 சதவீதம் எதிர்மறை வளர்ச்சி ஆகும்.
II. சேவைகள் வர்த்தகம்
ஏற்றுமதிகள் (ரசீதுகள்)
* 14 ஆகஸ்டு, 2020 தேதியிட்ட இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய செய்தி குறிப்பின் படி, ஜூன் 2020-இல் ஏற்றுமதிகளின் மதிப்பு 17.00 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (ரூ 1,28,697.70 கோடி) யாக இருந்தது. ஜூன் 2019 உடன் ஒப்பிடும் போது டாலர் மதிப்பில் இது (-) 8.39 சதவீதம் எதிர்மறை வளர்ச்சி ஆகும். ஜூலை 2020*-க்கான உத்தேசிக்கப்பட்ட சேவைகள் ஏற்றுமதியின் மதிப்பு 16.65 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.
இறக்குமதிகள் (கட்டணங்கள்)
* 14 ஆகஸ்டு, 2020 தேதியிட்ட இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய செய்தி குறிப்பின் படி, ஜூன் 2020-இல் இறக்குமதிகளின் மதிப்பு 9.96 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (ரூ 75,423.89 கோடி) யாக இருந்தது. ஜூன் 2019 உடன் ஒப்பிடும் போது டாலர் மதிப்பில் இது (-) 15.29 சதவீதம் எதிர்மறை வளர்ச்சி ஆகும். ஜூலை 2020*-க்கான உத்தேசிக்கப்பட்ட சேவைகள் இறக்குமதியின் மதிப்பு 9.65 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.
III. வர்த்தக மீதம்
* பொருள்கள்: ஜூலை 2020-இன் வர்த்தக பற்றாக்குறை 4.83 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஜூலை 2019-இன் 13.43 பில்லியன் அமெரிக்க டாலர்களோடு ஒப்பிடும் போது, இது (-) 64.06 சதவீதம் குறைவாகும்.
* சேவைகள்: 14 ஆகஸ்டு, 2020 தேதியிட்ட இந்திய ரிசர்வ் வங்கியின் செய்தி குறிப்பின் படி, ஜூன் 2020-க்கான சேவைகளின் வர்த்தக மீதம் (அதாவது நிகர சேவைகள் ஏற்றுமதி) 7.04 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். ஜூலை 2020*-க்கான உத்தேசிக்கப்பட்ட வர்த்தக மீத மதிப்பு 6.99 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.
* ஒட்டுமொத்த வர்த்தக மீதம்: பொருள்களையும் சேவைகளையும் சேர்த்து கணக்கிடும் போது, ஏப்ரல்-ஜூலை 2019-20-இன் பற்றாக்குறையான 33.50 பில்லியன் அமெரிக்க டாலர்களோடு ஒப்பிடும் போது, ஏப்ரல்-ஜூலை 2020-21*-கான ஒட்டுமொத்த வர்த்தக உபரி 14.06 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.
* குறிப்பு: சேவைகள் துறைக்காக இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய தரவுகள் ஜூன் 2020-க்கு உரியவை ஆகும். ஜூலை 2020-க்கன தரவுகள் மதிப்பீடுகளே ஆகும். இந்திய ரிசர்வ் வங்கியின் அடுத்தடுத்த வெளியீடுகளை ஆதாரமாகக் கொண்டு அவை திருத்தப்படும்.
சரக்கு வர்த்தகம்
ஏற்றுமதிகள் & இறக்குமதிகள்: (அமெரிக்க டாலர்கள் பில்லியனில்)
(தற்காலிகமானது)
ஜூலை ஏப்ரல்-ஜூலை
ஏற்றுமதிகள் (மறு-ஏற்றுமதிகள் உட்பட)
2019-20 26.33 107.41
2020-21 23.64 74.96
% வளர்ச்சி 2020-21/ 2019-20 -10.21 -30.21
இறக்குமதிகள்
2019-20 39.76 166.80
2020-21 28.47 88.91
% வளர்ச்சி 2020-21/ 2019-20 -28.40 -46.70
வர்த்தக மீதம்
2019-20 -13.43 -59.39
2020-21 -4.83 -13.95
ஏற்றுமதிகள் & இறக்குமதிகள்: (ரூ. கோடியில்)
(தற்காலிகமானது)
ஜூலை ஏப்ரல்-ஜூலை
ஏற்றுமதிகள் (மறு-ஏற்றுமதிகள் உட்பட)
2019-20 1,81,190.34 7,45,174.85
2020-21 1,77,305.79 5,66,322.06
% வளர்ச்சி 2020-21/ 2019-20 -2.14 -24.00
இறக்குமதிகள்
2019-20 2,73,579.71 11,57,232.64
2020-21 2,13,499.56 6,71,894.74
% வளர்ச்சி 2020-21/ 2019-20 -21.96 -41.94
வர்த்தக மீதம்
2019-20 -92,389.37 -4,12,057.79
2020-21 -36,193.77 -1,05,572.68
சேவைகள் வர்த்தகம்
ஏற்றுமதிகள், இறக்குமதிகள்(சேவைகள்): (அமெரிக்க டாலர்கள் பில்லியனில்)
(தற்காலிகமானது) ஜூன் 2020 ஏப்ரல்-ஜூன் 2020-21
ஏற்றுமதிகள் (வரவுகள்) 17.00 50.21
இறக்குமதிகள் (கட்டணங்கள்) 9.96 29.20
வர்த்தக மீதம் 7.04 21.01
ஏற்றுமதிகள், இறக்குமதிகள்(சேவைகள்): (ரூ. கோடியில்)
(தற்காலிகமானது) ஜூன் 2020 ஏப்ரல்-ஜூன் 2020-21
ஏற்றுமதிகள் (வரவுகள்) 1,28,697.70 3,80,958.13
இறக்குமதிகள் (கட்டணங்கள்) 75,423.89 2,21,522.27
வர்த்தக மீதம் 53,273.80 1,59,435.86
ஆதாரம்: இந்திய ரிசர்வ் வங்கியின் 14 ஆகஸ்டு, 2020 தேதியிட்ட செய்தி குறிப்பு
ஜூலை 2020-க்கான தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய பொருள்களின் துரித மதிப்பீடுகளைக் காண இங்கே சொடுக்கவும்
***
(Release ID: 1645971)
Visitor Counter : 235