பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
கோவிட் பெருந்தொற்று காலத்தில் மத்திய தகவல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கிடம் தலைமை தகவல் ஆணையர் திரு.பிமல் ஜுல்கா விளக்கம்
Posted On:
13 AUG 2020 7:18PM by PIB Chennai
கோவிட் பெருந்தொற்று காரணமாக, இந்திய அரசின் மத்திய தகவல் ஆணையம் உள்ளிட்ட பல்வேறு ஆணையங்களும் செயல்படவில்லை என்று சில மூத்த காங்கிரஸ் தலைவர்களும், மற்ற தலைவர்களும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வருவதை மத்திய வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுக்கான இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைகேட்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளி ஆகிய துறைகளுக்கான இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மறுத்துள்ளார். இதுதொடர்பாக விளக்கம் அளித்த அவர், குற்றச்சாட்டுகளை புள்ளி விவரங்களுடன் மறுத்துள்ளார். தகவல் உரிமை சட்டத்தின்கீழ் தகவல் அளிக்கும் அளவு, பெருந்தொற்றால் பாதிக்கப்படவில்லை. குறிப்பிட்ட கால இடைவெளியில், வழக்கமான அளவைவிட அதிகமான விண்ணப்பங்களுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய தகவல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து இந்திய தலைமை தகவல் ஆணையர் திரு.பிமல் ஜுல்கா-வுடன் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆய்வுசெய்தார். பின்னர் பேசிய மத்திய அமைச்சர், கோவிட் பெருந்தொற்று ஏற்பட்ட ஒட்டுமொத்த காலத்திலும் ஒரு நாள் கூட, ஆணையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என்று தெரிவித்தார். உண்மையில், பெருந்தொற்றுக்கு மத்தியிலும் அண்மையில் புதிதாக உருவாக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலிருந்து தகவல் உரிமை சட்டத்தின்கீழ் வந்த விண்ணப்பங்களை மே 15 முதல் காணொலிக்காட்சி மூலம் ஏற்று, விசாரணை நடத்தி, தீர்வுகாணப்பட்டு வருவதாகவும், இதற்கு ஆணையம் மற்றும் அதன் அதிகாரிகளே காரணம் என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
(Release ID: 1645711)
Visitor Counter : 170