பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
பொறுப்பான வணிகம் தொடர்பான குழுவின் அறிக்கையை மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டது
प्रविष्टि तिथि:
11 AUG 2020 8:24PM by PIB Chennai
மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலர் திரு ராஜேஷ் வர்மா, பொறுப்பான வணிகம் தொடர்பான குழுவின் அறிக்கையை இன்று புதுதில்லியில் வெளியிட்டார்.
பொறுப்பான வணிகத்துக்கான கட்டமைப்பை முன்வைப்பது குறித்த குழுவின் முயற்சிகளைப் பாராட்டிய திரு ராஜேஷ் வர்மா, இந்த அறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் செபி அமைப்புடன் இணைந்து பணியாற்றும் என்று தெரிவித்தார். இந்திய நிறுவனங்கள் உலக அளவில் தடம் பதிக்க விரும்பும் தருணத்தில், பொறுப்புள்ள வணிகம் என்ற “பெரும் நிறுவன நிர்வாகக் கருத்துரு” வளர்ந்து வரும் போக்கை புறக்கணிக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார். பொறுப்புள்ள வணிகம் தொடர்பான அறிக்கையை முன்னெடுத்துச் செல்வதில், தொழில் நிறுவனங்களும், வணிக சங்கங்களும் பங்காற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இந்தக் குழுவின் அறிக்கை மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது: www.mca.gov.in
-----
(रिलीज़ आईडी: 1645273)
आगंतुक पटल : 315