பாதுகாப்பு அமைச்சகம்

இந்திய விமானப்படைக்கு 106 அடிப்படைப் பயிற்சி விமானங்கள் உள்பட ரூ.8,722.38 கோடி மதிப்பிலான கொள்முதல் கருத்துருக்களுக்குப் பாதுகாப்புக் கொள்முதல் கவுன்சில் அனுமதி.

Posted On: 11 AUG 2020 5:59PM by PIB Chennai

தற்சார்பு இந்தியாமுன்முயற்சியை முன்னெடுத்துச் செல்லும் வகையில், உள்நாட்டுத் திறனில் நம்பிக்கை வைத்து, ஆயுதப்படைகளை வலுப்படுத்த, பாதுகாப்புக் கொள்முதல் கவுன்சில் (Defence Acquisition Council - DAC)  கூட்டம், பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்றது. புதுதில்லியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சுமார் ரூ.8,722.38 கோடி மதிப்பாலான, பல்வேறு உபகரணங்களை வாங்குவதற்கான கருத்துருக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்துஸ்தான் ஏரோநாட்டிக் நிறுவனம், அடிப்படைப் பயிற்சி விமான மாதிரியை ((HTT-40) வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதுஇதற்கான சான்றளிப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிறுவனத்திடமிருந்து 106 அடிப்படைப் பயிற்சி விமானங்களை வாங்க பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்திய விமானப்படையின் அடிப்படைப் பயிற்சிகளை மேற்கொள்ள இது உதவும்இதன் அடிப்படையில் முதலில் 70 பயிற்சி விமானங்கள் வாங்கப்படும். மீதி 36 விமானங்கள் எச்டிடி-40  இயங்கத் தொடங்கியதும் வாங்கப்படும்.

இந்தியக் கடற்படையின் ஆற்றலை மேம்படுத்தும் வகையில், சூப்பர் ரேபிட் கடன் மவுண்ட்இன் மேம்படுத்தப்பட்ட வடிவை கொள்முதல் செய்வதற்கு டிஏசி ஒப்புதல் வழங்கியுள்ளது. பாரத மிகுமின் நிறுவனம் (Bharat Heavy Electricals Limited – BHEL) -லிடம் இருந்து பெறப்படும், இந்த ஆயுதங்கள் கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையின் போர்க் கப்பல்களில் முக்கியமான பீரங்கியாகப் பொருத்தப்படும். இது, வேகமாக வரும் ஏவுகணைகள், அதிவேகத் தாக்குதல் விமானங்கள் ஆகியவற்றுக்கு எதிராகச் செயல்படக் கூடியதாகும். அதிகபட்ச தூர இலக்கை இது தாக்கக்கூடியது.

உற்பத்தி, தொழில்நுட்பம் அளவில், வெடிபொருள்களை உள்நாட்டிலேயே உருவாக்கும் திறனை மேம்படுத்துவதைக் கருத்தில் கொண்டு,  125 APFSDS (Armour Piercing Fin Stabilized Discarding Sabot) வெடிபொருள் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி வடிவில் இந்திய ராணுவத்துக்கு வாங்க டிஏசி ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த வெடிபொருள்களில் 70 சதவீதம் உள்நாட்டுப் பொருள்களாக இருக்கும்.

ஏகே 203 மற்றும் ஆளற்ற ஏரியல் வாகனங்கள் வாங்குவதை விரைவுபடுத்த வாய்ப்புள்ள கருத்துருக்களுக்கும் டிஏசி ஒப்புதல் வழங்கியுள்ளது.


(Release ID: 1645192) Visitor Counter : 311