புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்

ஜூன், 2020 மாதத்துக்கான தொழில் உற்பத்திக் குறியீடு மற்றும் உபயோகம்-சார்ந்த குறியீட்டின் துரித மதிப்பீடுகள் (அடிப்படை 2011-12=100)

Posted On: 11 AUG 2020 5:33PM by PIB Chennai

தொழில் உற்பத்திக் குறியீட்டின் (IIP) விரைவு மதிப்பீடுகள், ஆறு வாரங்கள்

இடைவெளியுடன் ஒவ்வொரு மாதத்தின் 12ஆம் தேதியன்று (அல்லது அதற்கு முந்தைய வேலை நாளன்று), ஆதார முகமைகளிடம் இருந்து பெறப்பட்டத் தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும். தயாரிப்புத் தொழிற்சாலைகள்/நிறுவனங்களிடம் இருந்து இந்தத் தகவல்கள் ஆதார முகமைகளுக்குக் கிடைக்கும்.

 

2. கோவிட்-19 பெருந்தொற்று பரவிவருவதைக் கட்டுப்படுத்த, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கை மத்திய அரசு அறிவித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, பெரும்பாலான தொழில்துறை நிறுவனங்கள் 2020 மார்ச் மாத இறுதி வாரத்திலிருந்து இயங்கவில்லை. இது பொதுமுடக்கக் காலத்தில் நிறுவனங்களின் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், தொழில் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கின. ஜூன் 2020-க்கான குறியீடு 107.8 ஆக இருக்கிறது. இது ஏப்ரல் 2020-இல் 53.6 ஆகவும், மே மாதத்தில் 89.5 ஆகவும் இருந்தது.

 

3. ஜூன் 2020 மாதத்துக்கான தொழில் உற்பத்தி குறியீட்டின் துரித மதிப்பீடு 107.8 ஆக இருக்கிறது. சுரங்கங்கள், உற்பத்தி மற்றும் மின்சாரத் துறைகளின் ஜூன் 2020 மாதத்துக்கான தொழில் உற்பத்தி குறியீடுகள் முறையே 85.4, 160.9 மற்றும் 156.2 ஆக உள்ளன (அறிக்கை I). தொழில் உற்பத்திக் குறியீட்டின் திருத்தக் கொள்கையின் படி இந்த துரித மதிப்பீடுகள் இனிவரும் அறிக்கைகளில் மாற்றங்களைக் காணும்.

 

5. நுகர்வு சார்ந்த வகைப்பாட்டின் படி, அடிப்படை சரக்குகளுக்கு 109.2 ஆகவும், மூலதன சரக்குகளுக்கு 64.3 ஆகவும், இடைநிலை சரக்குகளுக்கு 102.2 ஆகவும், உள்கட்டமைப்பு/கட்டுமான சரக்குகளுக்கு 110.7 ஆகவும் (அறிக்கை III) ஜூன் 2020-இல் குறியீடுகள் உள்ளன. மேலும், நீடித்தப் பயன்பாடுள்ள பொருள்கள் மற்றும் நீடித்தப் பயன்பாடில்லா பொருள்களின் குறீயிடுகள் ஜூன் மாதத்தில் முறையே 77.4 ஆகவும், 157.3 ஆகவும் உள்ளன.

 

6. தேசிய தொழில் வகைப்பாட்டின் பகுதி ரீதியான, 2-இலக்க அளவில் மற்றும் உபயோகம் சார்ந்த வகைப்பாட்டின் மூலம் ஜூன் மாதத்துக்கான தொழில் உற்பத்திக் குறியீட்டின் துரித மதிப்பீடு அறிக்கைகள், முறையே I, II மற்றும் III-ஆம் அறிக்கைகளில் உள்ளன. ஏப்ரல் 2020-இல் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிட்டிருந்தபடி, கோவிட்-19 பெருந்தொற்றுக்கு முந்தைய மாதங்களுடன் பெருந்தொற்றுக்குப் பிந்தைய மாதங்களின் தொழில் உற்பத்திக் குறியீடுகளை ஒப்பிடுவது சரியாகாது. உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பயனர்கள் புரிந்து கொள்வதற்கு ஏதுவாக, ஏப்ரல் 2020 வரையிலான மாதவாரியான குறியீடுகள் கூடுதல் அறிக்கை IV-இல் (தேசிய தொழில் வகைப்பாட்டின் 2-இலக்க அளவின் படி) வழங்கப்பட்டுள்ளன.

 

7. ஆதார முகமைகளிடம் இருந்து பெறப்பட்ட சமீபத்திய தகவல்களின் அடிப்படையில், ஜூன் 2020-க்கான தொழில் உற்பத்திக் குறியீட்டின் துரித மதிப்பீட்டுடன், மே 2020-க்கான குறியீடுகளின் முதல் திருத்தமும், மார்ச் 2020-கான குறியீடுகளின் இறுதித் திருத்தமும் நடைபெற்றுள்ளன. ஜூன் 2020-க்கான துரித மதிப்பீடுகள் 88 சதவீத எடையிட்ட எதிர்வினை விகிதத்துடனும் (weighted response rate), மே 2020-க்கான முதல் திருத்தம் 91 சதவீத எடையிட்ட எதிர்வினை விகிதத்துடனும், மார்ச் 2020-க்கான இறுதி திருத்தம் 90 சதவீத எடையிட்ட எதிர்வினை விகிதத்துடனும் மேற்கொள்ளப்பட்டன.

 

ஜூலை 2020க்கான குறியீடு 11 செப்டம்பர், 2020, வெள்ளிக்கிழமையன்று வெளியிடப்படும்.

 

***


(Release ID: 1645152) Visitor Counter : 249


Read this release in: English , Hindi , Telugu