சுற்றுலா அமைச்சகம்
‘1857-இன் நினைவுகள்- சுதந்திரத்துக்கு ஒரு கட்டியம்’ என்னும் தலைப்பில், சுதந்திரதினத்தைக் கருப்பொருளாகக் கொண்ட இணையக் கருத்தரங்குகளின் முதலாவது விளக்கக் காட்சியை சுற்றுலா அமைச்சகம் வழங்கியது
Posted On:
10 AUG 2020 4:12PM by PIB Chennai
இந்திய விடுதலைப் போராட்டம் நாட்டின் வரலாற்றில் முக்கியமான அத்தியாயம் ஆகும். கடந்த காலத்தில் நிகழ்ந்த அனைத்திலும் முக்கியமானது இது. “நமது தேசத்தைப் பாருங்கள்’’ என்ற இணையக் கருத்தரங்குகளின் ஒரு பகுதியாக, சுற்றுலா அமைச்சகம், நாட்டின் மிக முக்கியமான தினத்தைப் பெருமைப்படுத்தும் விதத்தில், விடுதலைப் போராட்ட இயக்கம் தொடர்பான கருப்பொருளை மையமாகக் கொண்டு ஐந்து கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில், குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், இந்தியா விடுதலை பெறுவதற்கு பங்களித்த முன்னோடிகள் குறித்த செய்திகள் இடம்பெறும்.
8.8.2020 அன்று , ‘1857-இன் நினைவுகள்- சுதந்திரத்துக்கு ஒரு கட்டியம்’ என்ற இணைய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. சுதந்திர தினத் தொடரில் இது முதலாவதாகும். நமது தேசத்தைப் பாருங்கள் தொடரில் இது 45-வது அத்தியாயமாகும். நமது தேசத்தைப் பாருங்கள் தொடர், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பதன் கீழ், இந்தியாவின் செழுமையான பன்முகத்தன்மையைப் பறைசாற்றுவதன் முயற்சியாகும். இது, ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற எழுச்சியை மெய்நிகர் தளத்தில் தொடர்ந்து அளித்து வருகிறது.
பரிதாபகரமான சமூகப் பொருளாதார நிலை, நிலப் பிரச்சினைகள், வருவாய் நிர்வாகம், பொருளாதாரச் சீரழிவு, நிர்வாகத்தில் இந்தியர்களின் கீழ் நிலை, குளறுபடியான கோட்பாடு, பகதூர் ஷா ஜபார் அவமதிப்பு, பாரபட்சமான காவல்துறை, நீதித்துறை, இந்திய சிப்பாய்களிடம் வேறுபாடு ஆகியவற்றால் கிளர்ச்சி வெடித்ததற்கான காரணங்கள் விளக்கப்பட்டன.
1857-ஆம் ஆண்டு முதல் சுதந்திரப்போரில் பங்கு கொண்டு, தில்லியின் எல்லைகளை அடைத்து பிரிட்டிஷ் படைகள் முன்னேறாத வண்ணம் தடுத்து, தில்லியை 120 நாட்கள் சுதந்திரமாக வைத்திருந்த பரீதாபாத்தின் பல்லப்கர் மன்னர் ராஜா நாகர் சிங் போன்ற அதிகமாக வெளியில் பிரபலமடையாதவர்கள் மற்றும் உண்மைச் சம்பவங்களைப் பட விளக்கம் அளித்தவர்கள் வழங்கினர். வேறு சண்டைகளும் இதில் காட்டப்பட்டன.
முதல் சுதந்திரப்போரில் தொடர்புடைய பல்வேறு இடங்கள் பட்டியலிடப்பட்டன. 1857 போர் பற்றிய தகவல்கள் கொண்ட படம் புதிய அனுபவமாக இருந்தது.
நமது தேசத்தைப் பாருங்கள் வலைதளத் தொடர் , மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தேசிய இ-நிர்வாக துறையின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொடரின் அமர்வுகள் தற்போது https://www.youtube.com/channel/UCbzIbBmMvtvH7d6Zo_ZEHDA/featured என்ற தளத்தில் கிடைக்கும். இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகம் கையாளும் அனைத்து சமூக ஊடகங்களிலும் இதைக் காணலாம்.
இந்தத் தொடரின் அடுத்த அத்தியாயம் ஆகஸ்ட் 12-ஆம்தேதி காலை 11 மணிக்கு நடைபெறும். இதன் தலைப்பு , பிரிட்டிஷாருக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் அதிகம் தெரியாத கதைகள் என்பதாகும். தொடருக்கான பதிவுகளை https://bit.ly/LesserKnownDAD-இல் செய்யலாம்.
***********
(Release ID: 1644877)
Visitor Counter : 252