அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
                
                
                
                
                
                
                    
                    
                        இந்தியா-கனடா IC - ஒருங்கிணைந்த உற்பத்தி துல்லியத் தொகுப்பு செல்லுலார் தொழில்நுட்ப (IMPACT) வருடாந்திர ஆராய்ச்சி மாநாடு, ஒத்துழைப்பை புதிய நிலைக்குக் கொண்டு செல்வதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்கப்பட்டது
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                10 AUG 2020 3:11PM by PIB Chennai
                
                
                
                
                
                
                இந்தியா-கனடா ஐ.சி-ஒருங்கிணைந்த உற்பத்தி துல்லியத் தொகுப்பு செல்லுலார் தொழில்நுட்ப வருடாந்திர ஆராய்ச்சி மாநாட்டில், தற்போதுள்ள சர்வதேச இணைப்புகளை வலுப்படுத்துவதன் மூலமும், பல பகுதிகளில் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலமும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் புதிய ஒத்துழைப்புகளைத் தொடங்குவதன் மூலமும் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்தோ-கனடிய அறிவியல், தொழில்நுட்ப ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறிய அதன் செயலாளரும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (DST) பேராசிரியருமான அசுதோஷ் சர்மா கூறுகையில், "இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வேறு நிலைக்குக் கொண்டு செல்ல புதிய முறைகள் ஆராயப்பட வேண்டும் என தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் அறிவியல் மற்றும் எலக்ட்ரிக் மொபிலிட்டி ஆகியவற்றில் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதோடு, விஞ்ஞானம், தொழில்நுட்ப வரிசைப்படுத்தல், அறிவியலில் பன்முகத்தன்மை மற்றும் பள்ளிகளில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகிய துறைகளில் சிறந்த நடைமுறைகளும் இரு நாடுகளுக்கிடையே பகிர்ந்து கொள்ளப்படலாம் என்று தெரிவித்தார். 
மேலும், இந்தியாவின்  அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புக் கொள்கை குறித்த மாநாடு குறித்து தெரிவித்ததுடன், குறிப்பிடத்தக்க பயனாளர்களில் ஒருவராக சர்வதேச இணைப்புகளின் பங்கையும் எடுத்துரைத்தார். அத்தகைய இணைப்புகளை வலுப்படுத்துவதற்காக கனடியp பார்வைகளையும், பங்கேற்பையும் அவர் வரவேற்றார். 
சமுதாய மாற்றம் மற்றும் நிலைத்தன்மையை விரைவுபடுத்துவதற்கான புதுமையான பலதரப்பட்ட கூட்டாண்மைக்காக இந்தியா-கனடா மையத்தால் (IC-ஒருங்கிணைந்த உற்பத்தி துல்லிய தொகுப்பு செல்லுலார் தொழில்நுட்பம்) இந்த மாநாடு 6 ஆகஸ்ட் 2020 அன்று இணையம் வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்டது.
***********
                
                
                
                
                
                (Release ID: 1644845)
                Visitor Counter : 253