இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

NCOE பெங்களூரில் COVID தொற்றால் பாதிக்கப்பட்ட ஐந்து ஹாக்கி வீரர்கள் நலமாக உள்ளனர்


வீர்ர்களுக்கு சிறந்த பராமரிப்பு வழங்கப்படுகிறது

Posted On: 08 AUG 2020 6:00PM by PIB Chennai

ஆகஸ்ட் 7 ஆம் தேதி கோவிட் பரிசோதனை செய்து நோய் தொற்று உறுதியாகி, பெங்களூருவின் தேசிய மையத்தில் வைக்கப்பட்டுள்ள ஐந்து ஹாக்கி வீர்ர்கள் நலமாக உள்ளனர். அவர்கள் இந்திய விளையாட்டு ஆணையத்தின் வேண்டுகோளின் பேரில் நியமிக்கப்பட்டுள்ள, இந்திய விளையாட்டு ஆணையத்தின் உள் மருத்துவர் மற்றும் மாநில அரசின் ஒரு மருத்துவர் ஆகியோரால் கவனிக்கபடுகின்றனர். கூடுதலாக, இந்திய விளையாட்டு ஆணையம் மணிப்பால் மருத்துவமனையின் நிபுணர் மருத்துவர்களும் வீர்ர்களை கவனித்து கொண்டனர். இன்று மாநில அரசால் நியமிக்கப்பட்டு வீரர்களைக் கவனித்த டாக்டர். அவினாஷ் எச்.ஆர், “வீரர்களின் வெப்பநிலை, ஆக்ஸிஜன் அளவு கண்காணிக்கப்பட்டு, ஐந்து வீரர்களும் லேசான அறிகுறி உடையவர்கள் என தெரிவித்தார். மேலும் ஐந்து பேரில் ஒருவர் தவிர மற்றவர்களுக்கு காய்ச்சல் இல்லை எனவும் தெரிவித்தார். அவர்கள் நலமுடன் இருப்பதாகவும், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள், பிற ஆதரவு மருந்துகள் தரப்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும். " அவர்கள் இயல்பு நிலைக்கு வரும் வரை, டாக்டர்களால் நெறிமுறையின்படி வழக்கமான பரிசோதனைகள் நடத்தப்படும் என கூறினார்.

 

ஐந்து விளையாட்டு வீரர்களுக்கும் வளாகத்தில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்துடன் 24 மணிநேரத் தொடர்பில் இருப்பதை உறுதி செய்வதற்காக, விளையாட்டு வீரர்களை பிரத்தியேகமாக கண்காணிக்கவும், அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், இந்திய விளையாட்டு ஆணையத்தின் அதிகாரிகள் இருவர் ஒதுக்கப்பட்டுள்ளனர். . பெங்களூருவில் இருந்து பேசிய இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளர் கிரஹாம் ரீட், “நான் அவர்கள் ஐந்து பேருடனும் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன், அவர்கள் நன்றாக இருக்கிறார்கள். அவர்களுக்கு சிறந்த கவனிப்பை வழங்க இந்திய விளையாட்டு ஆணையம் எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ளது. மெஸ் மெனுவைத் தாண்டி, சமையல்காரர்கள் தங்களுக்கு விருப்பப்படி சிறப்பு உணவுகளைத் தயாரிப்பதாகவும், விளையாட்டு வீரர்கள் அதைப் பற்றி மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள். ” என்றும் தெரிவித்தார்.

*******



(Release ID: 1644474) Visitor Counter : 185