பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்

மத்திய பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் 2020 தேசிய பஞ்சாயத்து விருதுகளை வழங்குகிறார்

Posted On: 07 AUG 2020 7:48PM by PIB Chennai

மத்திய பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சி, வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் கிராமங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு சர்பஞ்ச்ஸ் மற்றும் பஞ்சாயத்துக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பஞ்சாயத்துப் பிரதிநிதிகளும் கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து போன்ற பாடங்களில் பணியாற்ற முன்வர வேண்டும், இதனால் நாட்டின் ஒவ்வொரு கிராமமும் முழுமையான வளர்ச்சியின் பாதையில் முன்னேற முடியும்.

இன்று புதுதில்லியில் இருந்து காணொளிக் காட்சி மூலம் நடைபெற்ற தேசியப் பஞ்சாயத்து விருதுகள் வழங்கும் விழாவில் பேசிய திரு. தோமர், விருது பெற்ற பஞ்சாயத்துப் பிரதிநிதிகளை வாழ்த்தினார், மேலும் விருதுகளை வென்ற பஞ்சாயத்துகளிடமிருந்து உத்வேகம் பெற்று, மற்ற பஞ்சாயத்துகளும் சிறப்பாகச் செயல்பட வேண்டும், அதனால் அவர்களும் அடுத்த ஆண்டு இந்த விருதுகளைப் பெற முடியும் எனத் தெரிவித்தார். தேசிய பஞ்சாயத்து தினமான ஏப்ரல் 24, 2020 அன்று, பிரதமர் திரு. நரேந்திர மோடி ஒரு இணையம் வாயிலாக (Web cast) நாட்டின் பஞ்சாயத்துப் பிரதிநிதிகளுடன் நேரடித் தொடர்பு கொண்டார். தேசிய பஞ்சாயத்து விருதுகளின் மூன்று பிரிவுகளின் வெற்றியாளர்களான நானாஜி தேஷ்முக் ராஷ்டிரிய கவுரவ் கிராம சப புராசக்கர், சிறுவர் நட்பு கிராமப் பஞ்சாயத்து விருது மற்றும் கிராமப் பஞ்சாயத்து மேம்பாட்டுத் திட்டம் புராசக்கர் ஆகியவையும் அன்றைய தினம் அறிவிக்கப்பட்டன.

பிரதமர் திரு,  நரேந்திர மோடி கொரோனா தொற்று காரணமாக எழுந்துள்ள கடும் நெருக்கடியான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், நாட்டுக்கு ஒரு புதிய பாதையை வழங்க சுயசார்பு பாரத பிரச்சாரத்தை தொடங்கியதாக திரு, தோமர் கூறினார். தன்னம்பிக்கை இந்தியாவின் மையமாக  கிராமம் மற்றும் வேளாண் சார்ந்த பொருளாதாரம் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், பிரதமரின் பார்வையை உணர்ந்து செயல்படுத்துவதில், பஞ்சாயத்துகளின் மக்கள் பிரதிநிதிகளின் பங்கு மேலும் அதிகரிக்கிறது. திரு தோமர், மேலும் கூறுகையில், கிராமத்தின் ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்குச் செல்ல வேண்டும், தடுப்பூசி முதல் ஊட்டச்சத்து வரை அனைத்துத் திட்டங்களும் சீராக இயங்க வேண்டும், விவசாயிகள் விவசாய உத்திகள் பற்றிய தகவல்களைப் பெற வேண்டும்; இதை செயல்படுத்துவதற்கு Sarpanches உள்ளூர் அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கிராமவாசிகளுக்கான ஒவ்வொரு அரசு திட்டத்தின் நன்மைகளையும் சர்பஞ்ச்கள் கண்காணிக்க வேண்டும்.

அமைச்சர் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் உரிமையாளர் திட்டம் (ஸ்வாமித்வா யோஜனா) பற்றி குறிப்பிட்டு, இந்தத் திட்டம் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு அவர்களின் குடியிருப்பு சொத்துக்களுக்கான சட்ட ஆவணங்களை வழங்கும் என்று கூறினார். திரு. தோமர் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் கிராமோதய சத்தியம்” (Gramoday Sankalp) என்ற பத்திரிக்கையையும் வெளியிட்டார். இந்த இதழில் பஞ்சாயத்துகளின் சிறந்த படைப்புகள், எழுச்சியூட்டும் கருப்பொருள்கள் மற்றும் வெற்றிக் கதைகள் ஆகியவற்றுடன் துறைகளின் நலத்திட்டங்கள் பற்றிய முக்கியமான தகவல்களும் உள்ளன.

*****  (Release ID: 1644270) Visitor Counter : 253


Read this release in: English , Hindi , Manipuri