பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
நொடித்துப்போதல் மற்றும் திவாலாதலுக்கான இந்திய வாரியம்- IBBI (கார்ப்பரேட்டுகளுக்கான நொடித்துப் போதல் தீர்க்கும் செயல்முறை) 2016இன் விதிமுறைகளைத் திருத்தம் செய்கிறது
Posted On:
07 AUG 2020 7:09PM by PIB Chennai
நொடித்துப்போதல் மற்றும் திவாலாதலுக்கான இந்திய வாரியம், (IBBI) நொடித்துப்போதல் மற்றும் திவாலாதலுக்கான ((கார்ப்பரேட்டுகளுக்கான நொடித்துப் போதல் தீர்க்கும் செயல்முறை) இந்திய வாரிய விதிமுறைகள் 2016-இல் திருத்தம் செய்து, (நான்காவது திருத்தம்) 2020-ஐ இன்று வெளியிட்டுள்ளது.
நொடித்துப்போதல் மற்றும் திவாலாதலுக்கான நெறிமுறைகள், 2016 (நெறிமுறைகள்) ஒரு ரியல் எஸ்டேட் திட்டத்தின் கீழ், கடன் வழங்குநர்களின் குழுவில் ஒதுக்கப்பட்டவர்களைப் போல, ஒரு வகுப்பில் நிதிக் கடனாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு தீர்ப்பளிக்கும் அதிகார சபையால் அங்கீகரிக்கப்பட்டப் பிரதிநிதியை (AR) நியமிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக, விதிமுறைகள் இடைக்காலத் தீர்மான வல்லுநருக்கு பொது அறிவிப்பில் மூன்று நொடித்துத் போதல் நிபுணர்களை (IP) தேர்வு செய்ய வேண்டும், மேலும் ஒரு பிரிவில் உள்ள கடன் வழங்குநர்கள் அவர்களில் ஒருவரைத் தங்கள் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாகத் தேர்வு செய்யவேண்டும். இன்று விதிமுறைகளில் செய்யப்பட்ட திருத்தம், இடைக்காலத் தீர்மான வல்லுநரால் வழங்கப்படும் மூன்று நொடித்துத் போதல் நிபுணர்களை (IP) கார்ப்பரேட் கடனாளியின் பதிவுகளின்படி பிரிவில் அதிக எண்ணிக்கையிலான கடனாளர்களைக் கொண்ட மாநில அல்லது யூனியன் பிரதேசத்திலிருந்து இருக்கவேண்டும். இது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி (AR) மற்றும் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரிவில் கடன் வழங்குநர்களிடையே ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் தொடர்புகளை எளிதாக்கும்.
அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி ஒரு பிரிவில் கடன் வழங்குநர்களிடமிருந்து இரண்டு கட்டங்களில் வாக்களிக்கும் வழிமுறைகளைப் பெற வேண்டும் என்று தற்போது விதிமுறைகள் கருதுகின்றன, அதாவது, (i) கூட்டத்திற்கு முன்; மற்றும் (ii) கூட்டத்தின் நிமிடங்களை விநியோகித்த பின். இன்று ஒழுங்குமுறைகளில் செய்யப்பட்ட திருத்தம், அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி வாக்களிப்பு வழிமுறைகளை நிமிட சந்திப்பின் சாரங்களை விநியோகித்த பின்னரே வாக்களிக்கும் வழிமுறைகளைப் பெற்று அதற்கேற்ப வாக்களிக்க வேண்டும் என்று கோருகிறது. எவ்வாறாயினும், அவர் சாராம்சங்களை பரப்புவார், மேலும், கூட்டத்திற்கு முன்னர் பிரிவில் உள்ள கடன் வழங்குநர்களின் ஆரம்பக் கருத்துக்களை நாடலாம், இது கூட்டத்தில் திறம்பட பங்கேற்க அவருக்கு உதவும்.
கடன் வழங்குநர்களின் குழு மதிப்பீட்டு வரைச்சட்டத்தின் (Matrix) படி அனைத்து இணக்கமான தீர்மானத் திட்டங்களையும் மதிப்பீடு செய்வதோடு, அவற்றில் சிறந்தவற்றை அடையாளம் காணவும், அதை அங்கீகரிக்கவும் முடியும் என்று விதிமுறைகள் தெரிவிக்கின்றன. இன்று விதிமுறைகளில் செய்யப்பட்ட திருத்தம், மதிப்பீட்டு வரைச்சட்டத்தின் (Matrix) படி அனைத்து இணக்கமான தீர்மானத் திட்டங்களையும் மதிப்பீடு செய்த பின்னர், கடன் வழங்குநர்களின் குழு ஒரே நேரத்தில் அனைத்து இணக்கமான தீர்மானத் திட்டங்களுக்கும் வாக்களிக்கும். அதிக வாக்குகளைப் பெறும் தீர்மானத் திட்டம், அதாவது வாக்களிக்கும் பங்கில் அறுபத்தாறு சதவீதத்திற்கும் குறையாமல் வாக்குகளை பெறும் தீர்மானத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டதாக கருதப்படும்.
திருத்த விதிமுறைகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன. இவை பின் வரும் இணைய தளத்தில் காண கிடைக்கின்றன www.mca.gov.in and www.ibbi.gov.in.
****
(Release ID: 1644266)
Visitor Counter : 227