சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
டாக்டர் ஹர்ஷ் வர்தன், உணவு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான கூட்டு ஆராய்ச்சி மற்றும் தகவல் பரவலுக்கான அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சிக் கவுன்சில் (CSIR) மற்றும் உணவுப் பாதுகாப்பு, இந்தியத் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு தலைமை தாங்கினார்.
Posted On:
07 AUG 2020 5:38PM by PIB Chennai
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மற்றும் அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள அறிவியல் தொழில்நுட்பம், தொழில்துறை ஆராய்ச்சிக் கவுன்சில் (CSIR) ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், மாநிலத்தின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் (HFW), திருமதி. எஸ். அஸ்வினி கே. சவுபே முன்னிலையில் இன்று கையெழுத்திட்டார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பகுதியில் கூட்டு ஆராய்ச்சி மற்றும் தகவல் பரவலை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இரு முக்கிய நிறுவனங்களின் திறன்களையும், திறமையானவர்களையும் ஒன்றிணைக்கும் இந்த புதுமையான நடவடிக்கைக்கு உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் (FSSAI) மற்றும் அறிவியல் தொழில்நுட்பம், தொழில்துறை ஆராய்ச்சிக் கவுன்சில் (CSIR) இரண்டையும் வாழ்த்திய டாக்டர் ஹர்ஷ் வர்தன், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், CSIR - உடன் இந்திய வணிகங்களால் பயன்படுத்தப்படுவதற்கும் / அல்லது இணக்கங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் கிடைக்கும் புதுமையான தொழில்நுட்பங்களை அங்கீகரிப்பதன் மூலம் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து ஆராய்ச்சித் துறையில் உருவாக்கப்பட வேண்டிய தொழில்நுட்பத் திட்டங்களை அடையாளம் காண உதவும் என்று கூறினார். இது உணவு நுகர்வு, உயிரியல் ஆபத்து நிகழ்வு மற்றும் பாதிப்பு, உணவில் உள்ள அசுத்தங்கள், வளர்ந்து வரும் அபாயங்களை அடையாளம் காணுதல், அவற்றை நீக்குவதற்கான உத்திகள் மற்றும் விரைவான எச்சரிக்கை முறையை அறிமுகப்படுத்துதல் பற்றிய தரவுகளை சேகரிக்கும். உணவுப் பொருள்களின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து நம்பகமான அறிக்கையிடலுக்கான வழிமுறைகளை மேம்படுத்துதலுடன், சரிபார்ப்பதை நோக்கமாகக் கொண்ட நாடு முழுவதும் ஆய்வக வலையமைப்பின் தர உத்தரவாதத்தை வலுப்படுத்த இரு அமைப்புகளும் ஒத்துழைக்கும் என்று அவர் கூறினார்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மற்றும் அறிவியல் தொழில்நுட்ப, தொழில்துறை ஆராய்ச்சிக் கவுன்சில் (CSIR)க்கு இடையில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பேசிய டாக்டர். ஹர்ஷ் வர்தன், “புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒரு மிக முக்கியமான படியாகும், இது உணவு மற்றும் ஊட்டச்சத்து, உணவு மற்றும் நுகர்வோருக்கான பாதுகாப்பான தீர்வுகள் ஆகியவற்றில் கூட்டு ஆராய்ச்சி மற்றும் தகவல் பரப்புதலை எதிர்பார்க்கும் இந்தியாவுக்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும். இந்தியாவின் இந்த இரண்டு பிரதான நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு புதிய உணவு முறை 2050 இன் பார்வையை நிறைவேற்றப் பங்களிக்கும்.
ராக்ஃபெல்லர் அறக்கட்டளை, SecondMuse, and OpenIDEO ஆகியோரால் வழங்கப்பட்ட ‘”Eat Right India’ movement” விருதுக்காக பத்து உலகளாவிய அமைப்புகளில் ஒன்றாக உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு டாக்டர் ஹர்ஷ் வர்தன் வாழ்த்து தெரிவித்தார்.” 2050 ஆம் ஆண்டளவில் அவர்கள் உருவாக்க விரும்பும் மீளுருவாக்கம் மற்றும் ஊட்டமளிக்கும் உணவு முறையின் எழுச்சியூட்டும் பார்வையை உருவாக்கிய அமைப்புகளை இந்த விருது அங்கீகரிக்கிறது.
******
(Release ID: 1644168)
Visitor Counter : 243