நிதி அமைச்சகம்
சமையல் எண்ணெய், பித்தளை உடைசல்கள், கசகசா, கொட்டைப்பாக்கு, தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றுக்கான கட்டண மதிப்பை நிர்ணயித்தல் தொடர்பான கட்டண அறிவிக்கை எண் 65/2020-சுங்கவரி (N.T.)
प्रविष्टि तिथि:
31 JUL 2020 6:21PM by PIB Chennai
சுங்கவரித் திட்டம் 1962இன் (1962ன் 52) பிரிவு 14இன் உபபிரிவு (2) என்பதன் கீழ் அளிக்கப்பட்டு உள்ள அதிகாரத்தின்படி மறைமுக வரிகள், சுங்க வரிகளுக்கான மத்திய வாரியம் இது தேவை என்றும், உகந்தது என்றும் கருதி திருப்தி அடைந்ததால் 3 ஆகஸ்ட் 2001 தேதியிட்ட நிதியமைச்சகத்தின் (வருவாய்த் துறை) எண் 36/2001-சுங்கவரி (N.T.) என்ற இந்திய அரசின் அறிவிக்கையில் அதாவது 3 ஆகஸ்ட் 2001 தேதியிட்ட எஸ்.ஓ 748 (இ) என்ற எண்ணின் படி வெளியிடப்பட்டுள்ள இந்திய கெசட், எக்ஸ்ட்ராஆர்டனரி, பாகம் 2 பிரிவு 3, உபபாகம் (ii)இல் கீழ்வரும் திருத்தங்களை மேற்கொள்கிறது. இதன் விவரம்:
மேற்சொன்ன அறிவிக்கையில் அட்டவணை-1, அட்டவணை-2 மற்றும் அட்டவணை-3 ஆகியவற்றுக்குப் பதிலாக கீழ்வரும் அட்டவணைகள் மாற்றப்படுகின்றன. அவையாவன:
“அட்டவணை-1”
|
வரிசை எண்
|
அதிகாரம்/ தலைப்பு/ துணைத்தலைப்பு/ கட்டணப் பொருள்
|
பொருள்களின் விவரங்கள்
|
கட்டண மதிப்பு
(ஒரு மெட்ரிக் டன்னுக்கு எவ்வளவு அமெரிக்க டாலர் என்ற கணக்கில்)
|
|
(1)
|
(2)
|
(3)
|
(4)
|
|
1
|
1511 10 00
|
கச்சா பாமாயில்
|
680
|
|
2
|
1511 90 10
|
ஆர்பிடி பாமாயில்
|
701
|
|
3
|
1511 90 90
|
பிற- பாமாயில்
|
691
|
|
4
|
1511 10 00
|
கச்சா பாமோலின்
|
707
|
|
5
|
1511 90 20
|
ஆர்பிடி பாமோலின்
|
710
|
|
6
|
1511 90 90
|
பிற - பாமோலின்
|
709
|
|
7
|
1507 10 00
|
கச்சா சோயா பீன் எண்ணெய்
|
803
|
|
8
|
7404 00 22
|
பித்தளை உடைசல்கள் (அனைத்து தரநிலையிலும்)
|
3717
|
|
9
|
1207 91 00
|
கசகசா
|
3623
|
அட்டவணை -2
|
வரிசை எண்
|
அதிகாரம்/ தலைப்பு/ துணைத்தலைப்பு/ கட்டணப் பொருள்
|
பொருள்களின் விவரங்கள்
|
கட்டண மதிப்பு
(அமெரிக்க டாலர்)
|
|
(1)
|
(2)
|
(3)
|
(4)
|
|
1.
|
71 அல்லது 98
|
30.06.2017 தேதியிட்ட அறிவிக்கை எண் . 50/2017-சுங்கம் என்பதின் வரிசை எண் 356இல் கிடைக்கக் கூடிய எந்த வடிவத்திலான தங்கத்தைப் பொறுத்தும் கிடைக்கக் கூடிய பலன்கள்.
|
ஒவ்வொரு 10 கிராமுக்கும் 630
|
|
2.
|
71 அல்லது 98
|
30.06.2017 தேதியிட்ட அறிவிக்கை எண் . 50/2017- சுங்கம் என்பதின் வரிசை எண் 357இல் கிடைக்கக் கூடிய எந்த வடிவத்திலான வெள்ளியைப் பொறுத்தும் கிடைக்கக் கூடிய பலன்கள்.
|
ஒவ்வொரு கிலோவுக்கும் 746
|
|
3.
|
71
|
(i) தகடுகள் தவிர பிற வடிவிலான வெள்ளி மற்றும் 99.9%க்கு குறையாமல் வெள்ளியைக் கொண்டுள்ள வெள்ளிக் காசுகள் அல்லது வெள்ளியைக் கொண்டு பாதியளவு தயாரிக்கப்பட்ட பொருள்கள் ஆகியன 7106 92 என்ற உபதலைப்பின் கீழ் அடங்கும்.
(ii) 7106 92 என்ற உபதலைப்பின் கீழ் அடங்கும் தகடுகள் மற்றும் 99.9%க்கு குறையாமல் வெள்ளியைக் கொண்டுள்ள வெள்ளிக் காசுகள் அல்லது வெள்ளியைக் கொண்டு பாதியளவு தயாரிக்கப்பட்ட பொருள்கள், இறக்குமதிக்காக அன்றி அத்தகைய பொருள்களை அஞ்சல், கூரியர் அல்லது பேக்கேஜ் மூலமாக அனுப்புதல்
விளக்கம் – இந்தப் பதிவுக்கான நோக்கத்திற்கு எந்த வடிவத்திலும் வெள்ளியானது அயல்நாட்டு பணக்காசுகளாக, வெள்ளியால் செய்த நகைகளாக அல்லது வெள்ளியால் செய்த பொருள்களாக இருக்கக் கூடாது.
|
ஒவ்வொரு கிலோவுக்கும் 746
|
|
4.
|
71
|
(i) தோலா கட்டிகள் தவிர்த்த தங்கக்கட்டிகள் தயாரிப்பாளர் அல்லது சுத்திகரிப்பாளரின் வரிசை எண் மற்றும் மெட்ரிக் டன்னில் எடையை பொறித்திருந்தால்
(ii) 99.5% குறையாத அளவு தங்கத்தைக் கொண்ட தங்கக்காசுகள் மற்றும் தங்க நகைகளுக்கான உபரி பாகங்கள், இறக்குமதிக்காக அன்றி அத்தகைய பொருள்களை அஞ்சல், கூரியர் அல்லது பேக்கேஜ் மூலமாக அனுப்புதல்
விளக்கம் - இந்தப் பதிவுக்கான நோக்கத்திற்கு தங்க உதிரிப் பாகங்கள் என்பவை கொக்கி, கொக்கிப்பூட்டு, கிளாம்ப், ஊசி, கேட்ச், நகையை முழுமையாக அல்லது பகுதியாக குறிப்பிட்ட இடத்தில் பற்றிக் கொள்ளப் பயன்படுத்தப்படும் திருகாணி ஆகியவற்றை உள்ளடக்கிய சிறு பாகமாக எடுத்துக் கொள்ளப்படும்.
.
|
ஒவ்வொரு 10 கிராமுக்கும் 630
|
TABLE-3
|
வரிசை எண்
|
அதிகாரம்/ தலைப்பு/ துணைத்தலைப்பு/ கட்டணப் பொருள்
|
பொருள்களின் விவரங்கள்
|
கட்டண மதிப்பு
(ஒரு மெட்ரிக் டன்னுக்கு எவ்வளவு அமெரிக்க டாலர் என்ற கணக்கில்)
|
|
(1)
|
(2)
|
(3)
|
(4)
|
|
1
|
080280
|
கொட்டைப்பாக்கு
|
3746”
|
குறிப்பு:- முதன்மை அறிவிக்கையானது 3 ஆகஸ்ட் 2001 தேதியிட்ட எஸ்.ஓ.748 (ஈ), என்ற எண்ணின்படி 3 ஆகஸ்ட் 2001 தேதியிட்ட அறிவிக்கை எண் 36/2001-சுங்கவரி (N.T.) என்பதன் படி இந்திய கெசட், எக்ஸ்ட்ராஆர்டனரி, பாகம்-II, பிரிவு-3, உப-பிரிவு(ii) இல் வெளியிடப்பட்டுள்ளது. மற்றும் இது 27 ஜுலை 2020 தேதியிட்ட அறிவிக்கை எண் 62/2001-சுங்கவரி (N.T.) என்பதன்படி திருத்தப்பட்டு 27 ஜுலை 2020 தேதியிட்டு இந்திய கெசட், எக்ஸ்ட்ராஆர்டனரி, பாகம்-II, பிரிவு-3, உப-பிரிவு(ii)ல் எஸ்.ஓ. 2448(ஈ) என்ற எண்ணின்படி மின்னணு முறையில் வெளியிடப்பட்டுள்ளது.
(रिलीज़ आईडी: 1642730)
आगंतुक पटल : 258