குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

அகர்பத்தி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கைவினைஞர்களின் நன்மைக்காக கிராமாத்யோக் விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பரிசோதனை திட்டம் ஒன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது

Posted On: 31 JUL 2020 5:39PM by PIB Chennai

மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறை அமைச்சகம் 30 ஜூலை 2020 அன்று, கிராமாத்யோக் விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், கிராமத் தொழில்களை மேம்படுத்துவதற்காகவும், அகர்பத்தி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கைவினைஞர்களின் நன்மைக்காகவும் பரிசோதனைத் திட்டம் ஒன்றுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்தின்படி முதல் கட்டமாக, பரிசோதனை அடிப்படையிலான நாட்டின் வடகிழக்கு பகுதியில் ஒரு திட்டம் உட்பட நான்கு திட்டங்கள் தொடங்கப்படும். கைவினைஞர்கள் கொண்ட ஒவ்வொரு இலக்கு குழுவுக்கும், 10 கலவை இயந்திரங்களும்,50 தானியங்கி அகர்பத்தி தயாரிப்பு இயந்திரங்களும் வழங்கப்படும். மொத்தம் 200 தானியங்கி அகர்பத்தி தயாரிப்பு இயந்திரங்களும், 40 கலவை இயந்திரங்களும்கைவினைஞர்களுக்கு வழங்கப்படும்.

 

மத்திய அரசு இரண்டு முக்கிய முடிவுகளை டுத்துள்ளது.

1.அகர்பத்திப் பொருள்களை தடையற்ற வர்த்தகம் என்பதிலிருந்து கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட வர்த்தகம் என்று இறக்குமதிக் கொள்கையில் வரையறுத்தது.

 

2 அகர்பத்தித் தயாரிப்பதற்கு பயன்படும் வட்ட வடிவிலான மூங்கில் குச்சிகள் மீதான இறக்குமதித் தீர்வையை, 10 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாக உயர்த்தியது.

 

அகர்பத்தி உள்நாட்டிலேயே தயாரிப்பதை ஊக்குவிப்பதோடு, கிராமப்புற வேலை வாய்ப்புக்கும் இந்த முடிவுகள் வழிவகுக்கும். அகர்பத்தியின் உள்நாட்டுத் தயாரிப்புக்கும், உள்நாட்டுத் தேவைக்கும் இடையே நிலவுகின்ற இடைவெளியை அகற்றுவதற்கான முறையை ஆரம்பிக்கும் அம்சமாக இது இருக்கும். நாட்டில் அகர்பத்தி இறக்குமதி செய்யப்படுவதையும் இது குறைக்கும்.

 

சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும், சட்டபூர்வ அமைப்பான காதி கிராமத் தொழில் கழகம் (கே வி ஐ சி) இத்திட்டத்தின்கீழ் கைவினைஞர்கள் அகர்பத்தித் தயாரிக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கான பயிற்சியை வழங்கி, உதவிளிக்கும். நாட்டின் காதி அமைப்புகள், சிறப்பாகச் செயல்பட்டு வரும் அகர்பத்தித் தயாரிப்பு நிறுவனங்கள்ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட்டு கே வி ஐ சி அகர்பத்தி தயாரிக்கும் கைவினைஞர்களுக்கு,  வேலையும், அகர்பத்தி தயாரிப்பதற்கான கச்சாப் பொருள்களையும் அளிக்கும்.

 

கிராமங்களிலும், சிறு நகர்ப்புறங்களிலும், அகர்பத்தித் தயாரிப்புத் தொழிலை மீண்டும் துவக்குவதற்கு கிரியா ஊக்கியாக இத்திட்டம் செயல்படும். இதனால் உடனடியாக குறைந்தபட்சம் கூடுதலாக 500 வேலைவாய்ப்புகள் உருவாகும்.

 

நாட்டில் அகர்பத்தி உற்பத்தியை அதிகரிப்பது; பாரம்பரிய கைவினைஞர்களுக்குத் தொடர்ந்து வேலை வாய்ப்பு உருவாக்கித் தருவது; தொடர்ந்து அவர்களுக்கு வேலை அளிப்பது; அவர்களது ஊதியத்தை உயர்த்துவது ஆகியவையே இத்திட்டத்தின் நோக்கமாகும். நாட்டில் அகர்பத்தித் தொழில் துறையில் உள்நாட்டுத் தயாரிப்புக்கு இத்திட்டம் ஊக்கமளிக்கும். அகர்பத்தி இறக்குமதி செய்யப்படுவது குறையும்.

*****(Release ID: 1642713) Visitor Counter : 259