தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டெண் – ஜுன், 2020

Posted On: 31 JUL 2020 5:32PM by PIB Chennai

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்துடன் இணைந்த தொழிலாளர் பணியக அலுவலகம், நாடு முழுவதும் உள்ள 78-க்கும் மேற்பட்ட முக்கியத் தொழில் மையங்களில் அமைந்துள்ள 289 சந்தைகளிலிருந்து சேகரிக்கப்படும் குறிப்பிட்ட சில பொருள்களுக்கான சில்லரை விலை அடிப்படையில், தொழில்துறைத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டெண்ணை, ஒவ்வொரு மாதமும் தொகுத்து வருகிறதுஅதன்படி, 2020 ஜுன் மாதத்திற்கான குறியீட்டெண், இந்த செய்திக் குறிப்பு மூலம் வெளியிடப்படுகிறது

அகில இந்திய அளவிலான, 2020 ஜுன் மாதத்திற்கான, தொழிற்சாலைத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டெண் 2 புள்ளிகள் உயர்ந்து, 332 (முன்னூற்று முப்பத்திரண்டு) - ஆக உள்ளதுஒரு மாத சராசரி மாற்றத்தைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்த 0.64 சதவீத (+)உயர்வுடன் ஒப்பிடுகையில், 2020  மே மற்றும் ஜுன் மாதங்களுக்கிடையே  0.61 சதவீதம் (+) உயர்ந்துள்ளது

தற்போதைய குறியீட்டெண்ணின் அதிகபட்ச உயர்வைப் பொறுத்தவரைமொத்த மாற்றத்தில், உணவுப் பொருள்கள் மட்டும் 1.65 சதவீதப் புள்ளிகளை வழங்கியுள்ளனஅரிசி, கடலை எண்ணெய், மீன் இறைச்சி, ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, பால் (எருமைப்பால்), கத்தரிக்காய், காலிஃபிளவர், கொத்தமல்லி இலை, உருளைக்கிழங்கு, தக்காளி, சுத்திகரிக்கப்பட்ட மதுபானம், சமையல் எரிவாயு, பெட்ரோல் உள்ளிட்ட பொருள்கள், குறியீட்டெண் உயர்வுக்குக் காரணம் ஆகும்எனினும்கோதுமை மாவு, துவரம் பருப்பு, வெள்ளைப் பூண்டு, வெங்காயம், ஆரம் லில்லி, தேங்காய், வெண்டைக்காய், எலுமிச்சை, மாங்காய், மண்ணெண்ணெய் போன்றவை குறியீட்டெண்ணில் வீழ்ச்சியடைந்ததுஉயர்வைத் தடுத்துள்ளது

மைய அளவில், ஜாரியா அதிகபட்சமாக 9 புள்ளிகள் உயர்ந்துள்ளதுமற்ற மையங்களைப் பொறுத்தவரை,  3 மையங்களில் 8 புள்ளிகளும்,  2 மையங்களில் 7 புள்ளிகளும், 3 மையங்களில் 6 புள்ளிகளும்,  7 மையங்களில் 5 புள்ளிகளும்,  12 மையங்களில் 4 புள்ளிகளும்,  7 மையங்களில் 3 புள்ளிகளும், 10 மையங்களில் 2 புள்ளிகளும்,  12 மையங்களில் தலா ஒரு புள்ளி அளவிற்கும் உயர்வு காணப்பட்டதுஇதற்கு நேர்மாறாக, ராஞ்சி-ஹாதியா மையத்தில் அதிகபட்சமாக 8 புள்ளிகள் அளவிற்கு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுமற்ற மையங்களைப் பொறுத்தவரை, 5 மையங்களில் 3 புள்ளிகளும், 2 மையங்களில் 2 புள்ளியும், ஒரு மையத்தில் ஒரு புள்ளியும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுபிற 12 மையங்களில்  குறியீட்டெண்ணில் எந்த மாற்றமுமில்லை.  

31 மையங்களின் குறியீட்டெண், அகில இந்திய குறியீட்டெண்ணிற்கு மேலாகவும்,  45 மையங்களில் தேசிய சராசரிக்கும் குறைவாகவும் இருந்தது. சிந்த்வாரா மற்றும் ஜலந்தர் மையங்களில், அகில இந்திய குறியீட்டெண்ணிற்கு நிகராக காணப்பட்டது

அனைத்துப் பொருள்கள் அடிப்படையிலான ஆண்டு வாரியான பணவீக்கம், கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்த 8.59 சதவீதத்துடனும்கடந்த மாதம் இருந்த 5.10 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், 2020 ஜுன் மாதத்தில் 5.06 சதவீதமாகவும்  இருந்தது.   அதேபோன்று, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 5.47 சதவீதமாகவும், கடந்த மாதம் 5.88 சதவீதமாகவும் இருந்த உணவுப் பணவீக்கம்தற்போது 5.49 சதவீதமாகக் காணப்பட்டது.  

2020 ஜுன் மாதத்திற்கான தொழிற்சாலைத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டெண் குறித்துப் பேசிய மத்திய தொழிலாளர் நலன் மற்றும்  வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு.சந்தோஷ் கங்வார், நுகர்வோர் விலைக் குறியீட்டெண் உயர்வுஅமைப்பு ரீதியான தொழிற்சாலைத் தொழிலாளர்களின் கூலி / சம்பளத்தில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்  என்று தெரிவித்துள்ளார்.   வருடாந்திரப் பணவீக்கத்தில் காணப்படும் மிதமான போக்கிற்குபருப்பு வகைகள், அவை சார்ந்த பொருள்கள் மற்றும் பால் பொருள்கள், சுவையூட்டிகள் மற்றும் வாசனைத் திரவியங்களின் விலைக் குறைவே காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.  

 

*****



(Release ID: 1642712) Visitor Counter : 156


Read this release in: English , Hindi , Manipuri , Assamese