நிதி ஆணையம்

15 வது நிதி ஆணையத்தின் விவசாய ஏற்றுமதி தொடர்பான உயர் மட்ட நிபுணர் குழு அறிக்கை சமர்ப்பிக்கிறது

Posted On: 31 JUL 2020 5:12PM by PIB Chennai

வேளாண் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கும், அதிக இறக்குமதி மாற்றீட்டை செயல்படுத்த பயிர்கள் வளர்பை ஊக்குவிப்பதற்கும் மாநிலங்களுக்கு அளவிடக்கூடிய செயல்திறன் ஊக்கத்தொகைகளை பரிந்துரைக்க பதினைந்தாம் நிதி ஆணையத்தால் அமைக்கப்பட்ட வேளாண் ஏற்றுமதி தொடர்பான உயர் மட்ட குழு (HLEG) தனது அறிக்கையை இன்று ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளது.

 

பயனாளிகளிடமிருந்தும் தனியார் துறையிலிருந்தும் தீவிர ஆராய்ச்சி ஆலோசனைகளின் உள்ளீடுகளை எடுத்துக் கொண்ட பிறகு, வேளாண் ஏற்றுமதி தொடர்பான உயர் மட்டக் குழு (HLEG) அதன் பரிந்துரைகளை வழங்கியுள்ளது, அவற்றில் முக்கியமானது:

 

 1. 22 பயிர் மதிப்புச் சங்கிலிகளில் கவனம் செலுத்துதல் - தேவை நோக்கி உந்தும் அணுகுமுறை.
 2. மதிப்புச் சேர்த்தலில் கவனம் செலுத்துவதன் மூலம் மதிப்புச் சங்கிலித் திரளை (VCC) முழுமையாய் தீர்ப்பது.
 3. யனாளிகளின் பங்களிப்புடன் மாநில தலைமையிலான ஏற்றுமதித் திட்டத்தை உருவாக்குவது.
 4. தனியார் துறை ஒரு முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.
 5. மத்திய அரசு ஒரு செயல்பாட்டாளராக இருக்க வேண்டும்.
 6. செயல்படுத்துவதற்கும் நிதியளிப்பதற்கும் ஆதரவளிப்பதற்கும் வலுவான நிறுவன வழிமுறை.

 

குழு தனது அறிக்கையில் அரசு தலைமையிலான ஒரு ஏற்றுமதித் திட்டத்தைப் பரிந்துரைத்துள்ளது - பயிர் மதிப்புச் சங்கிலி திரளுக்கான வணிகத் திட்டம், இது விரும்பிய மதிப்புச் சங்கிலி ஏற்றுமதி விருப்பங்களைப் பூர்த்தி செய்யத் தேவையான வாய்ப்பு, முன்முயற்சிகள் மற்றும் முதலீட்டை வழங்கும். இந்தத் திட்டங்கள் நடவடிக்கை சார்ந்தவை, நேரத்திற்குட்பட்டவை மற்றும் விளைவுகளை மையமாகக் கொண்டவை. அரசு தலைமையிலான ஏற்றுமதித் திட்டத்தின் வெற்றிக்கு, பின்வரும் காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் குழு கூறியுள்ளது: -

 

 • திட்டங்கள் தனியார் துறையினர் மற்றும் பொருள்கள் வாரியங்களின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட வேண்டும்.
 • மாநில திட்ட வழிகாட்டி மற்றும் ஆழமான மதிப்புச் சங்கிலியை மேம்படுத்துதல்.
 • விளைவுகளையும், செயல்படுத்துதலையும் வழி நடத்த தனியார் துறை ஒரு முக்கியமான பங்கை வகிக்க வேண்டும்.
 • மாநில அரசு தலைமையிலான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.
 • நிறுவன நிர்வாகம் மாநில மற்றும் மத்திய அளவில் முழுவதும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
 • தற்போதுள்ள திட்டங்களை ஒன்றிணைத்தல், நிதி ஆணைய ஒதுக்கீடு மற்றும் தனியார் துறை முதலீடு மூலம் நிதியளித்தல்.

 

கோரிக்கை நோக்குநிலையை உறுதி செய்வதிலும் மதிப்புக் கூட்டலில் கவனம் செலுத்துவதிலும் தனியார் துறையினர் முக்கியமான பங்கு வகிக்கிறார்கள் என்பது குழுவின் கருத்தாகும்; இந்தத் திட்டங்கள் சாத்தியமானவை, வலுவானவை, செயல்படுத்தக்கூடியவை மற்றும் சரியான முறையில் நிதியளிக்கப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்துதல்; வணிக வழக்கை அடிப்படையாகக் கொண்ட தொழில்நுட்பத்திற்கான நிதிகளை வழங்குதல் மற்றும் திட்ட செயல்படுத்தலுக்கான அவசரத்தையும் ஒழுக்கத்தையும் உருவாக்குதல்.

 

வேளாண் ஏற்றுமதி தொடர்பான உயர் மட்டக் குழு (HLEG) உணர்வது :-

 

 • இந்தியாவின் விவசாய ஏற்றுமதி சில ஆண்டுகளில் 40 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 70 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கூடிய சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது.
 • வேளாண் ஏற்றுமதியில் மதிப்பிடப்பட்ட முதலீட்டு உள்ளீடுகள், உள்கட்டமைப்பு, செயலாக்கம் மற்றும் தேவைகளை உருவாக்குதல் ஆகியவற்றில் 8-10 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கலாம்.
 • கூடுதல் ஏற்றுமதிகள் 7-10 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்க வாய்ப்புள்ளது.
 • இது அதிக விவசாய உற்பத்தித்திறன் மற்றும் விவசாயியின் வருமானத்திற்கு வழிவகுக்கும்.

 

வேளாண் ஏற்றுமதி தொடர்பான உயர் மட்டக் குழுவின் (HLEG) உறுப்பினர்களில் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குர் திரு சஞ்சீவ் பூரி, சர்வதேச வர்த்தக மையத் தலைவர்; செல்வி ராதா சிங், முன்னாள் வேளாண் செயலாளர்; திரு மனோஜ் ஜோஷி, உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் பிரதிநிதி; திரு திவாகர் நாத் மிஸ்ரா, தலைவர் திரு. பாபன்குமார் போர்த்தாகூர், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் முன்னாள் தலைவர்; திரு சுரேஷ் நாராயணன், நெஸ்லே இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குர்; திரு ஜெய் ஷிராஃப், யுனைடெட் பாஸ்பரஸ் நிறுவனத்தின் (UPL) தலைமை நிர்வாக அதிகாரி; திரு சஞ்சய் சச்செட்டி, ஓலம் அக்ரோ இந்தியா நிறுவனத்தின் இந்தியத் தலைமை; டாக்டர் சச்சின் சதுர்வேதி, தலைமை இயக்குநர், வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்பு (RIS) ஆகியோர் அடங்குவர்.

 

இந்தக் கமிஷன் குழுவின் முயற்சிகளைப் பாராட்டியதுடன், இப்போது இந்திய அரசுக்கு தனது சொந்த அறிக்கையை இறுதி செய்வதற்கான அனைத்துப் பரிந்துரைகளையும் ஆராயும்.

 

***************(Release ID: 1642711) Visitor Counter : 16