வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

ஜூன், 2020இல் எட்டு முக்கியமான தனித்தொழில்களின் குறியீட்டு எண் (அடிப்படை: 2011-12 = 100)

Posted On: 31 JUL 2020 5:00PM by PIB Chennai

பொருளாதார ஆலோசகர் அலுவலகம், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை 2020 ஜூன் மாதத்திற்கான எட்டு முக்கியமான தனித் தொழில்களின் குறியீட்டு எண்ணை வெளியிடுகிறது.

 

2. 2020 மே மாதத்திற்கான எட்டு முக்கிய தனி தொழில்களின் குறியீட்டு வளர்ச்சி விகிதம், முந்தைய மே 2020 இல் 22.0% (திருத்தப்பட்ட) சரிவுடன் ஒப்பிடும்போது. 15.0% (தற்காலிக) குறைந்துள்ளது. 2020-21 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் அதன் ஒட்டுமொத்த வளர்ச்சி -24.6% ஆகும்.

 

3. மார்ச் 2020க்கான எட்டு முக்கியமான தனித் தொழில்களில் குறியீட்டு எண்ணின் இறுதி வளர்ச்சி விகிதம் -8.6% ஆக திருத்தப்பட்டுள்ளது. தொழில்துறை உற்பத்தி குறியீட்டில் (IIP) சேர்க்கப்பட்டுள்ள பொருள்களின்  மதிப்பில் எட்டு முக்கியமான தனித் தொழில்கள் 40.27 சதவீதம் உள்ளன. வருடாந்திர / மாதாந்திரக் குறியீட்டு மற்றும் வளர்ச்சி விகிதத்தின் விவரங்கள் இணைப்பில் வழங்கப்படுகின்றன.

 

வருடாந்திர / மாதாந்திரக் குறியீட்டு எண் மற்றும் வளர்ச்சி விகிதத்தின் விவரங்கள் இணைப்பில் வழங்கப்படுகின்றன.

 

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image00135Q7.png

5. எட்டு முக்கியமான தனித் தொழில்களின் குறியீட்டு எண்ணின் சுருக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

 

நிலக்கரி - நிலக்கரி உற்பத்தி (எடை: 10.33 சதவீதம்) 2019 ஜூன் மாதத்தை விட,  2020 ஜூன் மாதத்தில் 15.5 சதவீதம் குறைந்துள்ளது. அதன் ஒட்டுமொத்த குறியீட்டு எண் 2020-21 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில், முந்தைய ஆண்டை விட 15.0 சதவீதம் குறைந்துள்ளது.

 

கச்சா எண்ணெய் - கச்சா எண்ணெய் உற்பத்தி (எடை: 8.98 சதவீதம்) 2019 ஜூன் மாதத்தை விட 2020 ஜூன் மாதத்தில் 6.0 சதவீதம் குறைந்துள்ளது. அதன் ஒட்டுமொத்தக் குறியீட்டு எண் 2020-21 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில், முந்தைய ஆண்டை விட 6.5 சதவீதம் குறைந்துள்ளது.

 

இயற்கை எரிவாயு - இயற்கை எரிவாயு உற்பத்தி (எடை: 6.88 சதவீதம்) 2019 ஜூன் மாதத்தை விட 2020 ஜூன் மாதத்தில் 12.0 சதவீதம் குறைந்துள்ளது. அதன் ஒட்டுமொத்த குறியீட்டு எண் 2020-21 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில், முந்தைய ஆண்டை விட 16.2 சதவீதம் குறைந்துள்ளது.

 

சுத்திகரிப்பு தயாரிப்புகள் - பெட்ரோலிய சுத்திகரிப்பு உற்பத்தி (எடை: 28.04 சதவீதம்) 2019 ஜூன் மாதத்தை விட 2020 ஜூன் மாதத்தில் 8.9 சதவீதம் குறைந்துள்ளது. அதன் ஒட்டுமொத்த குறியீட்டு எண் 2020-21 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில், முந்தைய ஆண்டை விட 18.2 சதவீதம் குறைந்துள்ளது.

 

உரங்கள்- உரங்கள் உற்பத்தி (எடை: 2.63 சதவீதம்) 2019 ஜூன் மாதத்தை விட 2020 ஜூன் மாதத்தில் 4.2 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன் ஒட்டுமொத்தக் குறியீட்டு எண் 2020-21 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில், முந்தைய ஆண்டை விட 2.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

 

எஃகு - எஃகு உற்பத்தி (எடை: 17.92 சதவீதம்) 2019 ஜூன் மாதத்தை விட 2020 ஜூன் மாதத்தில் 33.8 சதவீதம் குறைந்துள்ளது. அதன் ஒட்டுமொத்தக் குறியீட்டு எண் 2020-21 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில், முந்தைய ஆண்டை விட 51.7 சதவீதம் குறைந்துள்ளது.

 

சிமென்ட் - சிமென்ட் உற்பத்தி (எடை: 5.37 சதவீதம்) 2019 ஜூன் மாதத்தை விட 2020 ஜூன் மாதத்தில் 6.9 சதவீதம் குறைந்துள்ளது. அதன் ஒட்டுமொத்தக் குறியீட்டு எண் 2020-21 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில், முந்தைய ஆண்டை விட 38.3 சதவீதம் குறைந்துள்ளது.

 

மின்சாரம் - மின்சாரம் உற்பத்தி (எடை: 19.85 சதவீதம்) 2019 ஜூன் மாதத்தை விட 2020 ஜூன் மாதத்தில் 11.0 சதவீதம் குறைந்துள்ளது. அதன் ஒட்டுமொத்தக் குறியீட்டு எண் 2020-21 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், முந்தைய ஆண்டை விட 16.1 சதவீதம் குறைந்துள்ளது.

 

குறிப்பு 1: ஏப்ரல், 2020, மே, 2020 மற்றும் ஜூன், 2020க்கான தரவு தற்காலிகமானது.

 

குறிப்பு 2: ஏப்ரல், 2014 முதல், புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் தரவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

 

குறிப்பு 3: மேலே குறிப்பிடப்பட்டுள்ள தொழில் வாரியான எடைகள் தொழில்துறை உற்பத்தி குறியீட்டிலிருந்து (IIP)  பெறப்பட்ட தனிப்பட்ட தொழில் எடை மற்றும் சார்பு விகித அடிப்படையில் ஒருங்கிணைந்த அளவுத்திருத்த அட்டவணையின் (ICI) ஒருங்கிணைந்த எடை 100க்கு சமமாக இருக்கும்.

 

குறிப்பு 4: மார்ச் 2019 முதல், முடிக்கப்பட்ட எஃகு உற்பத்திக்குள்ளான ‘கோல்ட் ரோல்ட் (CR) சுருள்கள்’ என்ற பொருளின் கீழ் ஹாட் ரோல்ட் பிக்கில்ட் அண்ட் ஆயில்ட் (HRPO) என்ற புதிய எஃகு தயாரிப்பு சேர்க்கப்பட்டுள்ளது.

 

குறிப்பு 5: 2020 ஜூலைக்கான குறியீட்டு எண் வெளியீடு  ஆகஸ்ட் 31, 2020 திங்கள் அன்று வெளியிடப்படும், 

 

**********


(Release ID: 1642709) Visitor Counter : 205


Read this release in: English , Marathi , Hindi , Manipuri