பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
ஜூன் மாதத்தில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்தி
Posted On:
23 JUL 2020 1:31PM by PIB Chennai
2020 ஜூன் மாதத்தில் கச்சா எண்ணெய் 2526.97 டிஎம்டி அளவில் உற்பத்தி செய்யப்பட்டது. இது, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 4.19 விழுக்காடும், முந்தைய ஆண்டு ஜூன் மாத உற்பத்தியை விட 5.99 விழுக்காடும் குறைவாகும். இந்த ஆண்டு ஏப்ரல் – ஜூன் வரையிலான 3 மாதத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி 7675.19 டிஎம்டியாக இருந்தது. இது இலக்கை விட 3.04 விழுக்காடும், முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தை விட 6.48 விழுக்காடும் குறைவாகும்.
2020 ஜூன் மாதத்தில் இயற்கை எரிவாயு உற்பத்தி 2323.82 எம்எம்எஸ்சிஎம் ஆக இருந்தது. இது மாதாந்திர இலக்கை விட 11.15 விழுக்காடும், முந்தைய ஆண்டு இதே மாதத்தில் செய்யப்பட்ட உற்பத்தியை விட 11.85 விழுக்காடும் குறைவாகும். இந்த ஆண்டு ஏப்ரல் – ஜூன் வரையிலான 3 மாதத்தில் இயற்கை எரிவாயு உற்பத்தி 6785.14 எம்எம்எஸ்சிஎம் ஆக இருந்தது. இது இலக்கை விட 11.12 விழுக்காடும், முந்தைய ஆண்டு இதே காலத்தில் செய்யப்பட்ட உற்பத்தியை விட 15.51 விழுக்காடும் குறைவாகும்.
2020 ஜூன் மாதத்தில், பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்தி 18724.75 டிஎம்டி ஆக இருந்தது. இது மாதாந்திர இலக்கை விட 11.02 விழுக்காடும், முந்தைய ஆண்டு இதே மாதத்தில் செய்யப்பட்ட உற்பத்தியை விட 8.89 விழுக்காடும் குறைவாகும். இந்த ஆண்டு ஏப்ரல் – ஜூன் வரையிலான 3 மாதத்தில் பெட்ரோலியப் பொருட்களின் மொத்த உற்பத்தி 51963.85 டிஎம்டி ஆகும். இது இலக்கை விட 16.29 விழுக்காடும், சென்ற ஆண்டு உற்பத்தியை விட 18.23 விழுக்காடும் குறைவாகும்.
(Release ID: 1640679)
Visitor Counter : 194