அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

பெருங்குடல் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான துப்புகளை, உடல் திரவங்கள் வழங்க முடியும்

Posted On: 20 JUL 2020 6:42PM by PIB Chennai

பெருங்குடல் மற்றும் மலக்குடல் ஆகியவற்றை பாதிக்கும் பெருங்குடல் புற்றுநோய் இந்தியாவில் புற்றுநோய் இறப்புக்கு 5 வது முக்கிய காரணமாகும், ஏனெனில் தாமதமாகk கண்டறியப்படுவதால் மீட்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில், மோசமான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி இல்லாதது, உடல் பருமன், அதிகமாக மது அருந்துதல் மற்றும் நீண்ட காலமாக புகைபிடித்தல் ஆகியவற்றால் இளையவர்களிடையே பெருங்குடல் புற்றுநோயின் விகிதம் விரைவாக அதிகரித்துள்ளது. தற்போதைய கண்டறிதல் முறைகளுக்கு ஊடுருவும் பயாப்ஸிகள் தேவை, அடுத்தடுத்த மதிப்பீட்டிற்கு சிறப்பு நிபுணத்துவம் தேவை. நோயை சரியான நேரத்தில் கண்டறியத் தாமதமாவதன் காரணமாக. விரைவான மற்றும் மலிவு சிகிச்சைக்கான அணுகலைக் கட்டுப்படுத்துகிறது.

எஸ். என். போஸ் அடிப்படை அறிவியல் தேசிய மையத்தைச் சேர்ந்த டாக்டர் டாடினி ரக்ஷித், இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் (DST) நிறுவப்பட்ட INSPIRE ஆசிரிய துணை விருதைப் (Faculty Fellowship Award) பெற்றவர். அவர் தனது ஆராய்ச்சிக் குழுவுடன் இணைந்து, இரத்தம், சிறுநீர் மற்றும் மலம் (மலம்) போன்ற உடல் திரவங்களிலிருந்து ஆரம்ப கட்டத்தில் பெருங்குடல் புற்றுநோயை அடையாளம் காண பயனுள்ளதாக இருக்கும் ஒரு முக்கியமான கருவியை உருவாக்கியுள்ளனர்.

உயிரிச்சுட்டுகளை (biomarkers) ஆக்கிரமிக்காமல் அடையாளம் காண டாக்டர் டாடினி ஆராய்ச்சி குழு ஒற்றை நீர்ப்பை (Vesicle) மட்டத்தில் உயரணுப்புற நீர்ப்பைகள் (Extracellular Vesicles EV) உடன் இணைந்து செயல்படுகின்றன.

பெருங்குடல் புற்றுநோய் உயிரணுக்களிலிருந்து EV க்களின் மேற்பரப்பில் ஹைலூரோனனை ஆய்வு செய்ய நானோ அளவுகோலைப் பயன்படுத்தும் அணுசக்தி நுண்ணோக்கியைப் பயன்படுத்தினர். (HA) ஹைலூரோனின் சிறப்பியல்பு குணாதிசயங்களைக் கண்டறிய அவர்கள் ஸ்பெக்ட்ரோஸ்கோபி (FT-IR, CD, மற்றும் RAMAN) பரிசோதனைகளையும் செய்துள்ளனர், மேலும் இரண்டு தரவுத் தொகுப்புகளும் ஒன்றுக்கொன்று மிகவும் தொடர்புடையது என்பது தெரிய வந்துள்ளது..

மேலும் விவரங்களுக்கு டாக்டர் டாடினி ரக்ஷித் (tatinirakshit@yahoo.com, tatini.rakshit@bose.res.in ) ஐ தொடர்பு கொள்ளவும்.

*****


(Release ID: 1640021) Visitor Counter : 298


Read this release in: English , Urdu , Hindi , Manipuri