அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
காந்த தாதுக்களில் உறைந்த தகவல், காலநிலை மாற்றங்களை வேகமாகவும், துல்லியமாகவும் கணிக்க முடியும்
प्रविष्टि तिथि:
15 JUL 2020 6:08PM by PIB Chennai
கடந்த காலங்களில் காலநிலை மாற்றத்திற்கான தடயங்கள் புதைபடிவங்கள், நுண்ணிய உயிரினங்கள், ஐஸ் மற்றும் ஐசோடோப்புகளில் சிக்கியுள்ள வாயுக்கள் ஆகியவற்றில் காணப்படுகின்றன , ஆனால் ஆய்வக நுட்பங்கள் சிக்கலானவை, விலை உயர்ந்தவை, மிகுந்த நேரம் எடுக்கும். இந்திய விஞ்ஞானிகள் இப்போது விரைவான மற்றும் திறமையான காந்த தாதுக்கள் நுட்பத்தை பயன்படுத்தி சிக்கலை விடுவித்துள்ளனர்.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் தன்னாட்சி நிறுவனமான இந்திய புவி காந்தவியல் நிறுவனத்தில் உள்ள விஞ்ஞானிகள், துணைக் கண்டத்தில் உள்ள பருவநிலை மாற்றத்தை பேலியோமோசூனல் முறையைப் பின்பற்றி, காந்த கனிமவியல் மூலம் கண்காணித்துள்ளனர். இந்த நுட்பமானது, தற்போதுள்ள முறைகளைக் காட்டிலும் வேகமாகவும், துல்லியமாகவும் செயலாற்றுகிறது. சுற்றுப்புற ரசாயனங்கள் மற்றும் செறிவு, தானிய அளவு, கனிமவியல் மாற்றங்கள் ஆகிய செயல்முறைகளுக்கு, காந்த கனிமவியல் உணர்திறன் மிக்கது.
சேஜ் இதழில், வெளியிடப்பட்ட ஆய்வில், திரு.பிரவீன் கவாலி மற்றும் அவரது ஆராய்ச்சியாளர்கள் குழுவானது, சுற்றுப்புறச்சுழல் கல்வி மற்றும் பருவநிலை பற்றி தொகுத்து ஆராய்ச்சி நடத்தியது. இந்தியாவில் உள்ள வெவ்வேறு சுற்றுப்புறச்சுழல்கள் மற்றும் பருவநிலை எல்லைகளில் வண்டல் மாதிரிகளை சேகரித்து, காந்த அளவுருக்களான காந்த பாதிப்பு, பின்னடைவு இல்லாத எஞ்சிய காந்தமயமாக்கள், செறிவூட்டலை தூண்டும் எஞ்சிய காந்தமயமாக்கல், பின்விளைவு சூழல், கியூரி வெப்பநிலை ஆகிய வடிவில் காந்த தாதுக்களில் உள்ள தகவல்களை கண்டறிந்து ஆய்வு நடத்தினார்.
********
(रिलीज़ आईडी: 1639047)
आगंतुक पटल : 201