ரெயில்வே அமைச்சகம்

தெரிவு நடைமுறை நிறைவடைந்தவுடன் தனியார் துறையினர் மூலம் 151 ரயில்கள் இயக்க உத்தேசிக்கப் பட்டுள்ளது, தற்போது இயக்கப்படும் ரயில்கள் தவிரவும் அவற்றிற்கு கூடுதலாகவும் இவை இயக்கப்படும்

Posted On: 08 JUL 2020 10:17PM by PIB Chennai

151 நவீனப் பெட்டிகள் கொண்ட பயணியர் ரயில்களை 109 இடங்களுக்கு இருவழி இணை ரயில்களாக இயக்குவதற்கு தனியாரிடமிருந்து தகுதியைத் தெரிவிக்கும் கோரிக்கைகளை இந்திய ரயில்வே வரவேற்றுள்ளது.

தெரிவு நடைமுறை நிறைவடைந்தவுடன, தனியார் துறையினர் மூலம் இயக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த 151 ரயில்கள், தற்போது இயக்கப்படும் ரயில்கள் தவிரவும் அவற்றிற்கு கூடுதலாகவும் இயக்கப்பட உள்ளன.

எந்த எந்தத் தடங்களில் தற்போது இயக்கப்படும் ரயில்களின் திறன்களுக்கு கூடுதலாக தேவைகள் அதிகமாக உள்ளதோ, அவற்றில் இந்த ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்களில் ஓட்டுனர்கள் மற்றும் கார்டுகள் ரயில்வேத் துறை அதிகாரிகளாக இருப்பார்கள். இந்த ரயில்களுக்கான பாதுகாப்பு அனுமதியை ரயில்வேத் துறை மட்டுமே வழங்கும்.


இதன் 109 இணை ரயில்கள் இந்திய ரயில்வேக் கட்டமைப்பில் 12 தொகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் ஒவ்வொன்றும் குறைந்தது 16 பெட்டிகளைக் கொண்டிருக்கும்.

இந்தத் திட்டத்திற்கு தனியாரிடமிருந்து ரூ. 30,000 கோடி முதலீடு தேவைப்படும். இது இந்திய ரயில்வேக் கட்டமைப்பில் தனியார் முதலீட்டில் பயணியர் ரயில்களை இயக்குவதற்கு எடுக்கப்படும் முதலாவது முயற்சியாகும். பெரும்பான்மையான ரயில்கள் இந்தியாவிலேயே, இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின்படி உருவாக்கப்படும். நிதியளித்தல், கொள்முதல் செய்தல், ரயிகளின் இயக்கம் மாறும் பராமரிப்பு தனியாரைச் சார்ந்தது ஆகும்.

இந்த ரயில்கள் அதிக பட்சமாக மணிக்கு 160 கி மீ வேகத்தில் இயங்கக்
கூடியவையாக இருக்கும். இதனால் பயண நேரம் வெகுவாகக் குறையும். இவற்றின் பயண நேரம், சம்பந்தப்பட்ட மார்க்கத்தில் தற்போது இயங்கும் மிக விரைவான ரயில்களுக்கு நிகராகவோ அல்லது அதைவிட அதிகமாகவோ இருக்கும்.

நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ரயில் பெட்டிகளை அறிமுகம் செய்தல்,குறைந்த பராமரிப்புச் செலவு, குறைந்த பயண நேரம், வேலைவாய்ப்புப் பெருக்கம், கூடுதல் பாதுகாப்பு வசதி ஏற்படுத்துதல், பயணியருக்கு உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவத்தை அளித்தல் மற்றும் பயணியர் போக்குவரத்தில் நிலவும் தேவை-வழங்கல் இடையேயான இடைவெளியைக் குறைப்பது ஆகியன இந்தத் திட்டத்தின் நோக்கங்கள் ஆகும்.

*****



(Release ID: 1637528) Visitor Counter : 198