நிலக்கரி அமைச்சகம்

நெய்வேலி அனல்மின் நிலைய கொதிகலன் வெடிவிபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு.

Posted On: 04 JUL 2020 7:06PM by PIB Chennai

நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகம் இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலைய 5-வது பிரிவில் ஜூலை 1, 2020-இல் ஏற்பட்ட கொதிகலன் வெடிவிபத்து மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஆராய உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணங்கள் குறித்து தேசிய அனல் மின் கழகத்தின் ஓய்வு பெற்ற இயக்குநர் (தொழில்நுட்பம்) திரு.பி.கே.மொகபத்ரா தலைமையிலான உயர்மட்டக்குழு விசாரணை நடத்தும். இயக்குநர் மட்டத்திலான அதிகாரி தலைமையிலான நிறுவனத்துக்குள்ளான விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது அனல் மின் நிலையத்தின் பிரிவுத் தலைமை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இரண்டாவது அனல் மின் நிலையத்தின் இரண்டாவது பிரிவில் உள்ள தலா 210 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 4 அலகுகளும் பாதுகாப்புத் தணிக்கைக்காக மூடப்பட்டுள்ளன. இந்த விசாரணை முடியும் வரை, விடுப்பில் உடனடியாக செல்லுமாறு நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகம் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் (மின்சாரம்) கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

 

***



(Release ID: 1636668) Visitor Counter : 123