விவசாயத்துறை அமைச்சகம்

10,000 வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளை ஏற்படுத்தியதன் மூலம் கிராமப்புறங்கள் மாற்றம் பெறும்; வேளாண்துறையின் முன்னேற்றத்துக்கு உதவுவது மட்டுமன்றி, வளர்ச்சியின் புதிய வாய்ப்புகளையும் உற்பத்தியாளர் அமைப்புகள் ஏற்படுத்தும் – மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர்.

Posted On: 04 JUL 2020 7:56PM by PIB Chennai

புதிதாக 10,000 வேளாண்மை உற்பத்தியாளர் அமைப்புகளை ஏற்படுத்தியதன் மூலம், விவசாயிகள் குழுக்களுக்கு புதிய பரிமாணம் ஏற்படும் என்று மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர் இன்று தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள விவசாயிகளில் 86 சதவீதம் பேர், சிறு, குறு விவசாயிகளாக உள்ளனர். இந்த வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் மூலம், இந்த விவசாயிகள், கிராமப்புறப் பொருளாதாரத்தை வலுப்படுத்த உள்ளனர். இது வேளாண்மையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதோடு, நாட்டின் வளர்ச்சியில் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்று அமைச்சர் கூறினார்.

 

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image001R6YJ.jpg

 

தொடக்கத்தில், இந்த வேளாண்மை உற்பத்தியாளர் அமைப்புகளில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை என்பது, சமதளப்பகுதிகளில் 300-ஆகவும், வடகிழக்கு மற்றும் மலைப்பகுதிகளில் 100-ஆகவும் இருக்கும் என்று திரு.தோமர் கூறினார்

திரு.தோமர் கூறும்போது, “2020-21-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், தோட்டக்கலைப் பயிர்களுக்கு ஒரு மாவட்டம்- ஒரு பொருள்என்ற வகையில் தொகுப்பு அடிப்படையிலான திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இது பொருள்களின் மதிப்பை கூட்டுவதோடு சந்தைப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தும்.  இது மத்திய அரசின் திட்டம். ரூ.6,865 கோடியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். அனைத்து வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கும் தொழில்ரீதியான ஆதரவு அளிக்கப்படுவதோடு, ஐந்து ஆண்டுகளுக்கு கையிருப்புக்கு வழிவகை செய்யப்படும். 15 சதவீத வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள், மாற்றமிகு மாவட்டங்களில் இருக்கும். பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் ஏற்படுத்தப்படும். இது தொகுப்பு அடிப்படையிலான உற்பத்தித் திட்டம். இந்த வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள், இயற்கை வேளாண்மையையும் ஊக்குவிக்கும்.

 

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image002ONT3.jpg

 

இந்தத் திட்டம் குறித்து மேலும் எடுத்துரைத்த திரு.தோமர், NABARD, SFAC, NCDC போன்ற அமைப்புகள் மூலம் இது செயல்படுத்தப்படும். நிதிநிலைத்தன்மையை ஏற்படுத்துவதற்காக பங்கு அளவுக்கு இணையாக ரூ.15 லட்சம் வரை நிதி அளிக்கப்படும். நபார்டு மற்றும் என்சிடிசி-யில் கடன் உத்தரவாத நிதி கிடைக்கும். இதன் படி, ஒவ்வொரு வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கும் ரூ.2 கோடி வரை உரிய கடன் உத்தரவாதம் அளிக்கப்படும் என்று கூறினார்.



(Release ID: 1636667) Visitor Counter : 217


Read this release in: Hindi , English , Urdu , Manipuri