கலாசாரத்துறை அமைச்சகம்
தம்ம சக்கர தினமாக அனுசரிக்கப்படும் ஆஷத பூர்ணிமா கொண்டாட்டங்களை குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் இன்று துவக்கி வைத்தார்
Posted On:
04 JUL 2020 2:51PM by PIB Chennai
தம்ம சக்கர தினமாக அனுசரிக்கப்படும் ஆஷத பூர்ணிமா கொண்டாட்டங்களை குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் இன்று புதுதில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் துவக்கி வைத்தார். பிரதமர் திரு நரேந்திர மோடியும் நிகழ்ச்சியின் போது காணொளி மூலம் சிறப்புரையாற்றினார். மங்கோலிய அதிபர் மேன்மை பொருந்திய கல்ட்மாகின் படுல்கா (KhaltmaagiinBatulga) அனுப்பிய சிறப்புச் செய்தியை இந்தியாவுக்கான மங்கோலியர் தூதர் மேன்மை பொருந்திய திரு. கோஞ்சிங் கன்போய்ட் (GonchingGanboid) வாசித்தார். மத்திய கலாச்சாரத்துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு பிரஹலாத் சிங் படேல், மத்திய சிறுபான்மை இன விவகார இணையமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரும் துவக்க விழாவில் உரையாற்றினார்கள்.
கோவிட் பெருந்தொற்று, மனித உயிர்களையும் பொருளாதாரத்தையும் உலக அளவில் மிக மோசமாக பாதித்து வருகின்ற இந்த நேரத்தில், புத்த பிரானின் போதனைகள் வழிகாட்டியாக விளங்குகின்றன என்று குடியரசுத் தலைவர் கூறினார். பேராசை, வெறுப்பு, வன்முறை, பொறாமை மற்றும் பிற தீயவற்றை ஒதுக்கி மகிழ்ச்சியை அடைய வேண்டும் என்று புத்தபிரான் மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். மனிதகுலம் இன்னும் பண்டைய வன்முறையிலும், இயற்கையை அழிப்பதிலும் ஈடுபட்டு வருகிறது என்பது இந்த அறிவுரைக்கு முரணாக இருக்கிறது. நம்முன் தற்போது இருக்கும் கொரோனா வைரஸ் பிரச்சினை குறையும் போது பருவநிலை மாற்றம் என்ற அதி தீவிரமான பிரச்சினை நம்முன் உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
குரு பூர்ணிமா என்றும் அழைக்கப்படும் ஆஷத பூர்ணிமாவை ஒட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி காணொளி உரையின் மூலம் வாழ்த்து தெரிவித்தார். புத்த பிரானுக்கு அவர் புகழாரம் சூட்டினார். மங்கோலியன் கஞ்சூரியின் நகல்கள் மங்கோலிய அரசுக்கு வழங்கப்படுவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். புத்தபிரானின் போதனைகள் குறித்தும், பல்வேறு சமுதாயங்கள், தேசங்கள் ஆகியவற்றின் நலனுக்கான எட்டு வழிப் பாதை குறித்தும் பிரதமர் கூறினார். மக்கள், பெண்கள், ஏழைகள், அமைதி, அகிம்சை ஆகிய அனைத்துக்கும் உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று புத்தம் கூறுகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். நமது பூமி தொடர்ந்து செயல்பட உதவும் வழிமுறைகளாக இந்தப் போதனைகள் இருக்கும் என்றார் பிரதமர். நம்பிக்கை மற்றும் நோக்கம் ஆகியவை குறித்து புத்தபிரான் கூறியுள்ளார் என்றும், இரண்டுக்குமிடையே வலுவான தொடர்பு உள்ளது என்று அவர் கண்டதாகவும் பிரதமர் கூறினார். இருபத்தோராம் நூற்றாண்டு குறித்து தாம் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், இந்த நம்பிக்கை இளைஞர்களிடம் இருந்து கிடைக்கிறது என்றும் பிரதமர் கூறினார். உலக அளவிலான பிரச்சினைகளுக்கு ஒளி வாய்ந்த இளைய மனங்கள் தீர்வு காண்கின்ற வகையில் சுற்றுச்சூழல் கொண்டதாக இந்தியா உள்ளது என்பதை அவர் வலியுறுத்தினார்
நிகழ்ச்சியில் பேசிய மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் தனிப்பொறுப்பு திரு பிரஹலாத் சிங் படேல் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சர்வதேச புத்த பேரமைப்பிற்கு நன்றி தெரிவித்தார். புத்தபிரானின் கருத்துக்கள் அனைத்து புவியியல் எல்லைகளையும் கடந்து, ஒட்டு மொத்த உலகத்திற்கும் வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்றார். கலாச்சார அமைச்சகம் மங்கோலியன் கஞ்சூர் நகல்களை தேசத்தின் முன்பும் வெளிநாடுகளிலும் வைத்துள்ளது என்று அமைச்சர் கூறினார்
சிறுபான்மை விவகாரங்களுக்கான மத்திய இணை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு பேசுகையில் தர்ம சக்ர மற்றும் பிரவர்தன் சூத்ரா என்பது சமஸ்கிருதத்திலும் தர்ம சக்கரத்தின் முதல் சுழற்சி என்று அறியப்படுவதாகக் கூறினார். நான்கு உயரிய உண்மைகளும், உயரிய எட்டு வழிப் பாதைகளையும் கொண்டது இச்சக்கரம்
தம்ம சக்கர தின விழாவிற்கு சர்வதேச புத்த பேரமைப்பு, மத்திய கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. முன்னதாக உலக வேசக் மற்றும் உலக வழிபாட்டு வாரம் மே 7 முதல் மே 16 , 2020 வரை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி மெய்நிகர் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. புத்த சங்கங்களின் உயர் தலைவர்கள், அறிஞர்கள், ஞானிகள் உலகம் முழுவதிலிருந்தும், சர்வதேச புத்தப் பேரமைப்பின் பல்வேறு கிளைகளில் இருந்தும், உறுப்பு அமைப்புகளிலிருந்தும் பங்கேற்றனர்.
*******
(Release ID: 1636479)
Visitor Counter : 164