புவி அறிவியல் அமைச்சகம்
மேற்கு, மத்திய மற்றும் அதனையொட்டிய கிழக்கு இந்தியப் பகுதிகளில், அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும்
Posted On:
03 JUL 2020 5:59PM by PIB Chennai
இந்திய வானிலை ஆய்வுத்துறையின், தேசிய வானிலை முன்னெச்சரிக்கை மையம் / புதுதில்லி மண்டல வானிலை மைய அறிக்கையின்படி :
மேற்கு, மத்திய மற்றும் அதனையொட்டிய கிழக்கு இந்தியப் பகுதிகளில், அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும்.
அரபிக்கடலில் இருந்து மேற்கு கடலோரப் பகுதிகளில், மேற்கு/தென்மேற்கு திசையில் வீசும் காற்று மற்றும் குறைந்த வெப்ப மண்டலப் பகுதிகளான தெற்கு குஜராத் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் உருவாகியுள்ள சூறாவளி சுழற்சியால் உருவான ஈரப்பத ஒருங்கிணைவு காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு, குஜராத், கொங்கன் மற்றும் கோவா, மத்திய மகாராஷ்டிரா மற்றும் கடலோர கர்நாடகாவில், பரவலாக, ஆங்காங்கே கனமான மழையோ அல்லது மிக கனத்த மழையோ பெய்யக்கூடும். கொங்கன் மற்றும் கோவா (மும்பை உட்பட), மத்திய மகாராஷ்டிராவின் ஓரிரு இடங்களில், 3 மற்றும் 4 ஜுலை ஆகிய தேதிகளிலும், குஜராத் மண்டலத்தில் 4 மற்றும் 5 ஜுலை, 2020 ஆகிய தேதிகளிலும் மிகக் கனத்த மழை (ஏறக்குறைய 20செ.மீ) பெய்யக்கூடும்.
கிழக்கு உத்தரப்பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் மையம் கொண்டுள்ள சூறாவளி சுழற்சி மற்றும் கிழக்கு உத்தரப்பிரதேசத்திலிருந்து கிழக்கு விதர்பா வரையிலான குறைந்த வெப்ப மண்டலப் பகுதிகளில் வடக்கு – தெற்கு திசையில் காற்று வீசக்கூடும். இதன் காரணமாக, மத்திய மற்றும் அதனையொட்டிய கிழக்கு இந்தியப் பகுதிகளில், அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய, கனமானது முதல் மிகக் கனத்த மழை வரை பெய்யக்கூடும்.
*****
(Release ID: 1636233)
Visitor Counter : 136