நிதி அமைச்சகம்
என்பிஎஃப்சி மற்றும் ஹெச்எஃப்சி ஆகியவற்றுக்கான சிறப்பு பணப்புழக்கத் திட்டம்
Posted On:
01 JUL 2020 7:29PM by PIB Chennai
என்பிஎஃப்சி-க்கள் மற்றும் ஹெச்எஃப்சி-க்கள் ஆகியவற்றின் பணப்புழக்க நிலைமையை அதிகரிக்கும் வகையில் மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் உறவுகள் அமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் 13-3-2020 அன்று அறிவித்திருந்தபடி சிறப்பு பணப்புழக்கத் திட்டம் ரூ.30,000 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு உள்ளது. ட்ரஸ்ட் வழங்கி உள்ள அரசு உத்தரவாதத்துடன் கூடிய சிறப்பு பிணையப் பத்திரங்களுக்கு உறுதி அளிப்பதன் மூலம் இந்த திட்டத்திற்கான நிதியை இந்திய ரிசர்வ் வங்கி வழங்கும். எந்த ஒரு காலத்திலும் நிலுவையில் உள்ள அத்தகைய பிணையப் பத்திரங்களின் மொத்த தொகை ரூ.30,000 கோடியைவிட அதிகமாக இருக்கக் கூடாது. ட்ரஸ்ட் வழங்கி உள்ள சிறப்பு பிணையப் பத்திரங்களுக்கான நிபந்தனையற்ற மற்றும் திரும்பப் பெற முடியாத உத்தரவாதத்தை இந்திய அரசு வழங்கும். இந்தத் திட்டம் 1 ஜுலை 2020 அன்று எஸ்பிஐ கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் லிமிடெட் (SBICAP) உருவாக்கியுள்ள எஸ்எல்எஸ் ட்ரஸ்ட் என்ற சிறப்பு நோக்க துணை நிறுவனத்தின் மூலம் தொடங்கப்படுகிறது.
ட்ரஸ்ட் உறுதி அளிப்பதற்கு ஏற்ற வகையில் இந்தத் திட்டம் 3 மாத காலத்திற்கு நடைமுறையில் இருக்கும். ட்ரஸ்ட் கடன் அளிக்கும் காலஅளவு என்பது (90 நாட்கள் வரையிலான குறுகிய காலகட்டத்துக்கு என்பிஎஃப்சி / ஹெச்எஃப்சி-க்களின் சிபி /என்சிடி-க்கள்) 90 நாட்கள் வரையிலான காலகட்டம் ஆகும். அளிக்கப்படும் நிதியானது என்பிஎஃப்சி-க்கள் / ஹெச்எஃப்சி-க்கள் தங்களது தற்போதைய கடன் பொறுப்புடைமையை திருப்பிச் செலுத்துவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டுமே தவிர சொத்துக்களை அதிகரிக்க பயன்படுத்தக் கூடாது. சந்தையில் பங்கேற்று உள்ளவர்கள் 90 நாட்களுக்குள் முதிர்வு அடையக்கூடிய தங்களது நிரந்தர முதலீடுகளை மாற்றிக் கொள்ள விரும்பினால் அவர்கள் எஸ்எல்எஸ் ட்ரஸ்டை அணுகலாம்.
*****
(Release ID: 1635870)
Visitor Counter : 221