அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அறிவியல் ஆராய்ச்சியை வலுப்படுத்த ‘’ அறிவியலைத் துரிதப்படுத்து’’ தளம் தொடக்கம்

Posted On: 01 JUL 2020 1:46PM by PIB Chennai

ஆராய்ச்சி உள்ளகப் பயிற்சிகள், திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள், பயிலரங்குகள் ஆகியவற்றை நாடு முழுவதும் நடத்துவதற்கு ஒற்றைத் தளத்தை வழங்கும் வகையில், ‘’அறிவியலைத் துரிதப்படுத்து’’ (ஏவி) என்னும் புதிய திட்டத்தை அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் தொடங்கியுள்ளது. இது பற்றி அதிகத் தகவல்களைத் தெரிந்து கொள்ள அதன் www.acceleratevigyan.gov.in என்னும் வலைதளத்தை அணுகலாம். அதில், இந்தத் தளம் ஏற்கனவே தனது ‘’அபியாஸ்’’ அம்சத்தின் கீழ், குளிர்கால அமர்வுக்காக விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.

அமைச்சகங்களுக்கிடையிலான இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் உயரிய அறிவியல் ஆராய்ச்சி, அறிவியல் மனித ஆற்றலைத் தயார் செய்வதாகும். இது வாழ்க்கை முறை ஆராய்ச்சி மற்றும் அறிவு சார்ந்த பொருளாதாரத்துக்கு வழிவகுக்கும். அனைத்து ஆராய்ச்சிகளும், வளர்ச்சி, தரம், சிறந்த பயிற்சி பெற்ற ஆராய்ச்சியாளர்களைக் கொண்டிருக்கும் என்பதை நன்கு உணர்ந்துள்ள ஏவி, ஆராய்ச்சி ஆற்றலைக் கண்டறிதல், வழிகாட்டுதல், பயிற்சி தேசிய அளவு குறித்த பயிலரங்குகளை மேற்கொள்வது ஆகியவற்றுக்கு முயற்சி செய்து அதற்கான பொறிமுறைகளை வலுப்படுத்தும்.

‘’விரிவான மூன்று இலக்குகளுடன் ஆராய்ச்சித் தளத்தை விரிவு படுத்துவது இதன் நோக்கமாகும். ஒருங்கிணைப்பு, அனைத்து அறிவியல் நிகழ்ச்சிகளையும் ஒன்று சேர்த்தல், உயரிய திசைநோக்குப் பயிலரங்குகளை நடத்த முயற்சித்தல், இத்தகைய ஆதாரங்கள், வசதிகள் இல்லாத,  ஆராய்ச்சி உள்ளகப்பயிற்சி பெறுபவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவை அந்த நோக்கங்கள்’’ என்று அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்தின் ஆலோசகர் டாக்டர்.ராஜீவ் மெகாஜன் கூறியுள்ளார். அடுத்த இரண்டு மாதங்களில் இந்த நிறுவனம் இதற்காக செயலி ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.

நாட்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு ஊக்கமளிக்கும் முயற்சியாக ‘’அபியாஸ்’’ நிகழ்ச்சி இருக்கும். ஆற்றல்மிக்க பிஜி/பிஎச்டி மாணவர்களை தயார்படுத்தி, குறிப்பிட்ட அளவிலான அவர்களது ஆராய்ச்சித் திறமைகளை பல்வேறு துறைகளில் மேம்படுத்துவது இதன் நோக்கமாகும்.

 (Release ID: 1635637) Visitor Counter : 27