பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

தில்லியில் கழிவுகளைப் பயன்படுத்தி எரிசக்தி உற்பத்தி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தியன்ஆயில், தேசிய அனல் மின் கழகம் மற்றும் தெற்கு தில்லி மாநகராட்சி இடையே கையயெழுத்தாகியுள்ளது

Posted On: 30 JUN 2020 6:19PM by PIB Chennai

தில்லி, ஓக்லா பகுதியில் கழிவுகளை பயன்படுத்தி எரிபொருள் உற்பத்தி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தியன் ஆயில், தேசிய அனல் மின் கழகம் (என்.டி.பி.சி) மற்றும் தெற்கு தில்லி மாநகராட்சி இடையே இன்று(30.06.2020) கையெழுத்தானதுமத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகுத்துறை அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான்மின்துறை மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), தில்லி துணைநிலை ஆளுனர் திரு.அனில் பைஜால், பெட்ரோலியத்துறை செயலாளர் திரு.தருன் கபூர், இந்தியன் ஆயில் நிறுவனத் தலைவர் திரு.சஞ்சீவ் சிங், மற்றும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை, தெற்கு தில்லி மாநகராட்சி, தேசிய அனல் மின் கழகம் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படிஇந்தியன் ஆயில் நிறுவனம், தெற்கு தில்லி மாநகராட்சி மற்றும் தேசிய அனல் மின் கழகம் ஆகியவை ஒருங்கிணைந்துதில்லி ஓக்லா பகுதியிலுள்ள குப்பை கொட்டும் நிலைய வளாகத்தில்கழிவுகளிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் மாதிரி நிலையம் ஒன்றை அமைக்க உள்ளனமாநகராட்சி கழிவுகளில், எரிக்கக்கூடிய பொருட்களைப் பயன்படுத்தி, இந்த நிலையத்தில்ஆண்டுக்கு 17,500 டன் RDF வகை ஒத்திசைவு வாயு(syngas) உற்பத்தி செய்யப்பட்டு, பின்னர் அதிலிருந்து மின்சார உற்பத்தி செய்யப்பட உள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய திரு.தர்மேந்திர பிரதான், தில்லியில் மாநகராட்சி திடக்கழிவுகளை கையாள்வது பெரும் பிரச்சினையாக உள்ள நிலையில்இந்த எரிசக்தி நிலையம்அதற்குத் தீர்வுகாண்பதாக அமையும் என்றார். பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தொலைநோக்குத் திட்டமான சுயசார்பு இந்தியா திட்டத்தின்கீழ், பசுமை மற்றும் திறன்மிக்க எரிசக்தி எதிர்காலத்திற்கு வழிவகுக்கக்கூடிய சிறப்புமிக்க இந்தத் திட்டத்தை உருவாக்கியதற்காக, இந்தியன் ஆயில், தெற்கு தில்லி மாநகராட்சி மற்றும் தேசிய அனல் மின் கழகம் ஆகியவற்றை அவர் பாராட்டினார்

மின்துறை அமைச்சர் திரு.ஆர்.கே.சிங் பேசுகையில்இடைவெளிகளை நிரப்புவதில் பிரதமர் திரு.நரேந்திரமோடி எப்போதும் கவனம் செலுத்தி வருவதாகவும்ஒரு நல்ல நோக்கத்திற்காக, இரண்டு அமைச்சகங்கள் இணைந்திருபபது, ஒரு சிறந்த உதாரணம் என்றார்திடக் கழிவுகளை கையாள்வது, நாடு முழுவதும் பெரும் பிரச்சினையாக உள்ளது என்றும்குறிப்பாக, 2 மற்றும் 3-ம் நிலை நகரங்களில் இப்பிரச்சினை உள்ளதாகவும் குறிப்பிட்டார்கழிவுகள் பெருமளவில் சேருவது, சுகாதாரப் பிரச்சினைகளை உருவாக்குவதுடன், சுற்றுச்சூழல் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது.   எனவே, இதுபோன்ற நிலையங்கள் அமைப்பதற்கு ஒத்துழைப்பு அளிக்க முடிவு செய்திருப்பதுடன்எரிவாயு தயாரிப்புச் செலவை பொருட்படுத்தாமல், மாற்று வழிகளைக் கண்டறிந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்தில்லி நிலையத்தில் பயன்படுத்தப்பட உள்ள தொழில்நுட்பம், குறைந்த அளவிலான புகையை வெளியிடுவதோடுபயன்படுத்தக்க எச்சங்களை வெளியிடும் எனவும் அவர் தெரிவித்தார்



(Release ID: 1635573) Visitor Counter : 114


Read this release in: English , Urdu , Hindi , Punjabi