மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
உலக தலைமைப் பண்பு உச்சிமாநாடு, செயற்கை நுண்ணறிவு மற்றும் உருவெடுத்துவரும் தொழில்நுட்பம், காக்எக்ஸ் 2020 விழாவில் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் இந்தியாவின் மைகவ் கொரோனா உதவி டெஸ்க் இரண்டு விருதுகளை வென்றது.
Posted On:
30 JUN 2020 6:54PM by PIB Chennai
செயற்கை நுண்ணறிவுப் பிரிவால் இயங்கும் அமைப்பான MyGov Corona Helpdesk , அண்மையில் நடைபெற்ற காக்எக்ஸ் 2020 , உலகத் தலைமைப்பண்பு உச்சிமாநாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு மற்றும் உருவெடுக்கும் தொழில்நுட்ப விழாவில் இரண்டு பெருமை மிகு விருதுகளை வென்றுள்ளது. லண்டனில் ஆண்டு தோறும் நடைபெறும் இந்த விழாவில், மைகவ்-இன் தொழில்நுட்ப பங்குதார நிறுவனமான ஜியோஹாப்டிக் டெக்னாலஜிஸ், கோவிட்-19 மற்றும் சமுதாயத்துக்கான சிறந்த புதுமை விருது, கோவிட்-19 ஒட்டுமொத்த வெற்றியாளர் மக்கள் தேர்வு ஆகிய விருதுகளை வென்றுள்ளது.
மைகவ் உலகின் மிகப்பெரிய அளவில் மக்கள் பங்கேற்கும் ஒரு தளமாகும். இது, அரசுக்கும், மக்களுக்கும் தொடர்புப் பாலமாகவும், இந்தியாவில் நிர்வாகப் பங்கேற்பு வசதியளிப்பதாகவும், இரு வழிகளில் செயல்படுகிறது. கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், மைகவ், ஜியோஹாப்டிக் டெக்னாலஜிஸ் நிறுவனம், வாட்ஸ்அப் குழு சேர்ந்து, செயற்கை நுண்ணறிவால் இயங்கும் மைகவ் கொரோனா உதவி டெஸ்க்-ஐ வார நாட்களையும் சேர்த்து சாதனையாக 5 நாட்களில் உருவாக்கியுள்ளது.
மைகவ் கொரோனா உதவி டெஸ்க், உண்மையான பொதுத்துறை, தனியார் துறைக் கூட்டுறவுக்கு இலக்கணமாகத் திகழ்கிறது. இதில், மைகவ் மக்கள் சார்ந்த சேவைகளை வழங்குகிறது. ஜியோஹாப்டிக் டெக்னாலஜிஸ் நிறுவனத்தால்,, கட்டமைப்பு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத் தீர்வு வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, ஈடுபடுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில், தினசரி சேவைகள் மற்றும் தீர்வுகளை இது மேம்படுத்தி வருகிறது.
காக்எக்ஸ் செயற்கை நுண்ணறிவு குறித்த உலகின் பெரிய நிகழ்வுகளில் ஒன்றாகும். ஆண்டு தோறும் லண்டனில் நடைபெறும் இந்த நிகழ்வில், தொழில் பிரிவு, அரசு, வர்த்தகம், ஆராய்ச்சி ஆகிய துறைகளைச் சேர்ந்த உயர்மட்டப் பிரதிநிதிகள் 1500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். உலகம் முழுவதும், செயற்கை நுண்ணறிவில் மிகச் சிறப்பான செயல்பாடு, உருவெடுக்கும் தொழில்நுட்பங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்தக் கோவிட் காலத்தில் சமுதாய நலனுக்காக பல்வேறு வகையில் செயல்படும் அமைப்புகளிடம் இருந்து வந்த நூற்றுக்கணக்கான விண்ணப்பங்களில், இந்தியாவின் ‘மைகவ் கொரோனா உதவி டெஸ்க்’ தீவிர மதிப்பீட்டுக்குப் பின்னர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதுமிருந்து பங்கேற்ற பார்வையாளர்கள் மற்றும் நடுவர்கள் முன்னிலையில் நடைபெற்ற நேரடி டிஜிடல் விளக்கக் காட்சியில், பெருந்தொற்றுக் காலத்தில் மக்களைப் பாதுகாக்க உதவும், மைகவ் கொரோனா உதவி இருக்கைக்கு செயற்கை நுண்ணறிவால் இயங்கும் தொழில்நுட்பத் தீர்வை வழங்கியதற்காக ஜியோஹாப்டிக் நிறுவனத்துக்கு இந்தப் பெருமை மிகு விருது வழங்கப்பட்டது.
கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்ளும் வகையில், மைகவ் கொரோனா உதவி இருக்கைத் தளத்தில் 76 மில்லியனுக்கும் மேற்பட்ட தகவல்கள் பெறப்பட்டன. 41 மில்லியனுக்கும் அதிகமான உரையாடல்கள் பரிசீலிக்கப்பட்டன. அரசு, ஜியோஹாப்டிக், வாட்ஸ்அப் ஆகியவற்றின் தீவிர ஈடுபாடு காரணமாக, இந்தத் தளத்தில் 28 மில்லியனுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தொடர்ந்து தகவல்களை வழங்கி வருகின்றனர். இதன் மூலம், இந்தத் தளம் கோவிட்-19 குறித்த அண்மைத் தகவல்களைத் தெரிவிக்கவும், தவறான தகவல்கள், வதந்திகளைத் தடுக்கவும் வசதி ஏற்பட்டுள்ளது.
விருது பெற்ற நிகழ்வில் உரையாற்றிய ஹாப்டிக் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஆக்ரித் வைஷ், ‘’ சரியான தகவலைத் தெரிவிக்க வேண்டும் என்ற முன்முயற்சியில் தொடங்கபட்ட இந்த தளம், இன்று உலகப் புகழ் பெற்ற தொழில்நுட்பத் தீர்வாக மாறி, லட்சக்கணக்கான மக்களுக்கு உதவும் சேவையை தொடர்ந்து வருகிறது. மைகவ் கொரோனா உதவி இருக்கையை குறுகிய காலத்தில் கட்டமைக்க அரசின் ஆதரவு முக்கிய காரணமாக அமைந்தது. இது உலகத் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த விருது, தொழில்நுட்பம் என்பது சமுதாயத்துக்கு நீண்டகாலம் பயனளிப்பது என்ற எங்களது நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது. இந்தப் பெருந்தொற்றுக்கு எதிராக 24 மணி நேரமும் போராடி வரும், நமது சுகாதார நிபுணர்கள்தான் இந்தப் பெருமைக்குரிய உண்மையான வெற்றியாளர்கள் என்று நாங்கள் ஒப்புக்கொள்ள விரும்புகிறோம்’’ என்று கூறினார்.
(Release ID: 1635457)
Visitor Counter : 201