அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை-அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் இந்தியன் தேசிய அறிவியல் கழகத்துடன் இணைந்து “என் கண்கள் மூலம் அறிவியல்” என்ற கருப்பொருளுடன் புகைப்படம் மற்றும் திரைப்படப் போட்டியைத் தொடங்குகிறது.

Posted On: 30 JUN 2020 5:29PM by PIB Chennai

இந்திய தேசிய அறிவியல் கழகம் ( Indian National Science Academy - INSA) அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் (Science and Engineering Research Board - SERB) இணைந்து ஒரு நிமிடப் புகைப்படம் / ஓவியம் மற்றும் ஒரு நிமிடத் திரைப்படப் போட்டியை ஏற்பாடு செய்கின்றன. இந்தப் போட்டி மக்கள் தங்கள் எல்லைகளுக்கு அப்பால் சென்று அவர்களைச் சுற்றியுள்ள அறிவியலைப் பார்க்கவும், புரிந்துகொள்ளவும், பாராட்டவும் உதவுகிறது. ஒரு வித்தியாசமான சிந்தனைத் தோற்றம் விஞ்ஞான உணர்வை வளர்ப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் உதவுவதுடன், ஆராய்ச்சியில் ஆர்வத்தையும், படைப்புத் திறன்களையும் ஊக்குவிக்கும்.

போட்டியின் கருப்பொருள் ‘என் கண்கள் மூலம் அறிவியல்.’ இந்த முக்கிய கருப்பொருளின் கீழ் பொருத்தமான எந்தத் துணை ஆய்வுக் கருப்பொருளையும் தேர்வு செய்யலாம். துணை கருப்பொருள்களின் சில எடுத்துக்காட்டுகள் ஆய்வகம், சமையலறை, விளையாட்டு, மருத்துவமனை, வீட்டில் அல்லது வேலையில் உள்ள அறிவியல் போன்றவை ஆகும். கோவிட்-19 வைரஸ், ஆரோக்கியமான வாழ்க்கை, புவி-பாரம்பரியம், சுகாதாரம், விண்வெளி, மற்றும் ‘என் கண்கள் மூலம் அறிவியல்’ என்ற முக்கியக் கருப்பொருளின் கீழ் உள்ளடக்கப்பட்ட எந்தவொரு துணைக் கருப்பொருளும் தொடர்பான மேற்கண்ட வடிவங்களில் எந்தவொரு படைப்பையும் இந்தப் படைப்பு உள்ளடக்கியிருக்கலாம்.

இந்தப் போட்டியில் இந்தியர்கள் மட்டுமே பங்கு பெறலாம். அனுமதிக் கட்டணம் கிடையாது. உள்ளீடுகள் மூன்று குழுக்களின் கீழ் இருக்கும் - முனைவர் பட்டப்படிப்பு மாணவர்கள் (பி.எச்.டி) மற்றும் எந்தவொரு துறையிலும் முனைவர் பட்டப்படிப்பு முடித்தவர்கள், எம்.பி.பி.எஸ், எந்தவொரு துறையிலும் எம்.எஸ், எம்.டி, எம் டெக், எம்பிஏ போன்ற தொழில்முறைப் பட்டங்களைப் பெற்றவர்கள், பயிற்சி மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பணிபுரியும் மருத்துவர்கள், பொறியாளர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள், துணை மருத்துவர் குழுவும் உருவாக்கப்படலாம். நுழைவு ஒரு தனிநபரின் பெயரில் அல்லது இரண்டு நபர்களின் குழுவின் பெயராக இருக்கலாம்.

உள்ளீடுகள் ஜூன் 30, 2020  அன்று காலை 11 மணி மற்றும் 2020 ஜூலை 15 அன்று மாலை 5 மணி நேரத்தில் இணையம் மூலம் எப்போது வேண்டுமானாலும் சமர்ப்பிக்கலாம்.

மேலதிக விவரங்களுக்கு: http://www.insaindia.res.in/scroll_news_pdf/INSA_SERB_Competition.pdf)

*****



(Release ID: 1635418) Visitor Counter : 186


Read this release in: Manipuri , English , Hindi , Marathi