ஜல்சக்தி அமைச்சகம்

ஜல்ஜீவன் இயக்கம் குறித்து மத்திய ஜல்சக்தி அமைச்சர் கோவா முதலமைச்சருக்குக் கடிதம்.

Posted On: 26 JUN 2020 5:24PM by PIB Chennai

மத்திய ஜல்சக்தி அமைச்சர் திரு. கஜேந்திர சுங் ஷெகாவத், கோவா முதலைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், 2021-ஆம் ஆண்டுக்குள் கிராமப் பகுதி வீடுகளுக்கு 100 சதவீதக் குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்க மாநிலம் திட்டமிட்டிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

2021-ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமப் பகுதிகளிலும் உள்ள வீடுகளில் 100 சதவீதம் குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்க கோவா திட்டமிட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 2.6 லட்சம் வீடுகளில், 2.29 லட்சம் வீடுகளுக்கு ஏற்கனவே, குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை செயலர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், 2020-21-ஆம் ஆண்டுக்கான ஜல்ஜீவன் இயக்கத்துக்கான ஆண்டு செயல் திட்டத்தை கோவா மாநிலம் தாக்கல் செய்தது. அதில், 2021-க்குள் 100 சதவீதக் குடிநீர்க் குழாய் இணப்பு வழங்கப்படும் என கோவா மாநில தலைமைச் செயலர் உறுதியளித்தார். இது செயல்பாட்டுக்கு வரும்போது, ‘எல்லா வீடுகளிலும் தண்ணீர்என்ற 100 சதவீத குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தில், முதலிடத்தில் வரும் சில மாநிலங்களில் கோவாவும் ஒன்றாக இருக்கும்.

2020-21-ஆம் ஆண்டில், கோவாவுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.3.08 கோடியிலிருந்து ரூ.12.40 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2020-21-ஆம் ஆண்டில், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு 15-வது நிதிக்குழுவின் மானியமாக கோவா ரூ. 75 கோடி பெறும். இதில், 50 சதவீத நிதி, குடிநீர் மற்றும் தூய்மைப் பணிகளுக்குச் செலவிடப்பட வேண்டும். தூய்மை இந்தியா இயக்கத்தின் (கிராமப்புறம்) கீழ், வழங்கப்படும் நிதி, நீர் சுத்திகரிப்பு மற்றும் மறுபயன்பாட்டுப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.

அனைத்து கிராமங்களிலும் நீண்ட காலத்துக்கு நீட்டித்திருக்கும் கிராமப்புற குடிநீர் விநியோகத்துக்குத்  திட்டமிடுதல், செயல்படுத்துதல், பராமரிப்பு, ஆகிய பணிகளில்உள்ளூர் கிராம சமுதாயம், கிராமப்பஞ்சாயத்து அல்லது துணைக்குழு, பயன்பாட்டுக்குழுக்கள் ஆகியவற்றை ஈடுபடுத்துமாறு முதலமைச்சரை , ஜல்சக்தி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

ஒவ்வொரு கிராமத்திலும், குடிநீர் விநியோகச் சேவையைக் கண்காணிக்க இணையதள அடிப்படையிலான தொலையுணர்வு முறையைத் துவங்கும் முக்கிய மாநிலமாக கோவா உள்ளது. நவீன முறையில் செயல்படுத்தப்படும் இதன் கட்டுப்பாடு மாநில தலைமையகத்தில் இருக்கும். இதன் மூலம், தரமான, போதிய அளவு குடிநீர் முறையாக விநியோகிக்கப்படுவதை நிகழ் நேர அடிப்படையில் கண்காணிக்கப்பட வாய்ப்பு ஏற்படும்.


(Release ID: 1635021) Visitor Counter : 204