உள்துறை அமைச்சகம்

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாநிலத்தின் ஏழைத் தொழிலாளர்கள் நலனுக்காகவும், அவர்களின் அதிகாரமளிப்பிற்காகவும் “உத்தரப்பிரதேசத்தில் சுயசார்பு வேலை வாய்ப்புத் திட்டம்” தொடங்கப்பட்டதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவித்தார்.

Posted On: 26 JUN 2020 7:42PM by PIB Chennai

பிரதம மந்திரி திரு. நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட “உத்திரப்பிரதேச சுயசார்பு வேலை வாய்ப்புத் திட்டம்” உத்தரப்பிரதேச மாநிலத்தின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா தெரிவித்தார். "இந்தத் திட்டம் ஏழைகள் வேலை வாய்ப்புத் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, இது உத்தரப்பிரதேசத்திற்கு இரட்டை வளர்ச்சியை ஏற்படுத்தும்" என்று திரு.அமித்ஷா தொடர்ச்சியாக தனது சுட்டுரைகளில் தெரிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் “‘உத்திரப்பிரதேச சுயசார்பு வேலைவாய்ப்புத் திட்டத்தின் ’கீழ் பிரதரின் வீட்டுவசதித் திட்டம், சாலை வசதித் திட்டம், கழிப்பறைகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகள் கட்டுமானம், மரம் மற்றும் காடு வளர்த்தல் போன்ற பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்” என்றார். "இது கிராமங்களில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் என்பதோடு மட்டுமல்லாமல் கிராமப்புற இந்தியாவின் விரிவான வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும்" என்றும் அவர் கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சர், திரு. அமித்ஷா “‘உத்திரப்பிரதேச சுயசார்பு வேலைவாய்ப்புத் திட்டம்” உத்தரப்பிரதேசத்தின் 31 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும், இது கோடிக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஏழைத் தொழிலாளர்களுக்கு அவர்களின் ஊர்களிலேயே வீடுகளுக்கு அருகில் வேலை வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் பயனளிக்கும்”. முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏழை மற்றும் கிராமப்புற வளர்ச்சியின் நலன்களின் கலவையாக இருக்கும் இந்த முன்னோடித் திட்டத்திற்கு வழி வகுத்த பிரதமர், திரு நரேந்திர மோடி மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் திரு யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்என தெரிவித்தார்.

*****



(Release ID: 1635015) Visitor Counter : 148