நிதி அமைச்சகம்

மாறுபடும் வட்டி விகிதத்துடன் கூடிய கடன்பத்திரங்கள் 2020 (வரிக்குட்பட்டது) புதிய திட்டம் அறிமுகம்.

Posted On: 26 JUN 2020 10:13PM by PIB Chennai

புதிய திட்டம் ஒன்றை அரசு அறிவித்துள்ளது. தற்போதுள்ள 7.75 சதவிகிதம் சேமிப்பு (வரிக்குட்பட்டது) கடன் பத்திரங்கள் 2018, திட்டம் 28 மே 2020 வங்கி வர்த்தகக் கணக்கு நாள் இறுதியுடன் முடிவடைவதை ஒட்டி, இந்தத் திட்டத்திற்குப் பதிலாக புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய, மாறுபடும் வட்டி விகிதத்துடன் கூடிய சேமிப்புக் கடன் பத்திரங்களின் 2020 (வரிக்குட்பட்டது) திட்டத்தின் பரவலான அம்சங்கள் பின்வருமாறு:

 

. எண்.

அம்சம்

விவரங்கள்

1.

திட்டத்தின் பெயர்

மாறுபடும் வட்டி விகித சேமிப்புக் கடன் பத்திரங்கள் 2020 (வரிக்குட்பட்டது)

2.

வெளியீடு

மத்திய அரசின் சார்பில் இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட உள்ளது

3.

தகுதி

கடன் பத்திரங்களை வைத்திருக்கக்கூடியவர்கள் -

  1. இந்தியாவில் வசிப்பவர்,-
  1. தனிப்பட்ட முறையில், அல்லது
  2. கூட்டு அடிப்படையில் தனிப்பட்ட முறையில், அல்லது
  3. யாராவது ஒருவர் அல்லது எஞ்சியுள்ள நபர் அடிப்படையில் தனிப்பட்ட முறையில், அல்லது

(d) மைனர் ஒருவரின் சார்பாக தந்தை/ தாய்/ சட்டபூர்வ காப்பாளர் கார்டியன்

(ii) இந்து கூட்டுக் குடும்பம் (ஹிந்து அண்டிவைடெட் ஃபேமிலி)

விளக்கம்: இந்த பத்தியின் நோக்கம் குறித்து பொருள் பெற அந்நியச்செலாவணி மேலாண்மைச் சட்டம் 1999 (42 of 1999) பிரிவு 2 clause 5 இல் வரையறுக்கப்பட்டுள்ள படி அதே பொருளைக் குறிக்கும்.

4.

வெளியீட்டு விலை /டினாமினேஷன்/ குறைந்தபட்ச சந்தா

இந்த கடன் பத்திரங்கள் ஒவ்வொன்றும் 100 ரூபாய் என்ற அடிப்படையில் குறைந்தபட்சத் தொகை ரூ 1000 (நாமினல் மதிப்பு), அதன் மடங்கு ஆகியவற்றில் வெளியிடப்படும்.

5.

வெளியீட்டு நாள்

இந்தக் கடன் பத்திரங்கள் கடன் பத்திர லெட்ஜெர் கணக்கு வடிவத்தில் மட்டும் வெளியிடப்படும். பணம் (ரூபாய் 20 ஆயிரம் மட்டும் செலுத்தலாம்) செலுத்தப்படும் தினத்திலிருந்து அல்லது காசோலை, டிராஃப்ட், நிதியங்கள் மூலமாக செலுத்தப்பட்டால், அவை கணக்கில் வரும் தேதியிலிருந்து திறக்கப்படும்.

6.

அதிகபட்ச வரையறை

இந்தக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய அதிகபட்ச உச்சவரம்பு எதுவும் இல்லை.

7.

படிவங்கள்/ சான்றிதழ்

இந்தப் பத்திரங்கள், கடன் பத்திர லெட்ஜர் கணக்கு வடிவத்தில் மட்டுமே வழங்கப்படும். இவை கடன் பத்திரத்தை வைத்திருப்பவரின் கணக்கில் பாண்ட் லெட்ஜர் அக்கௌன்ட்(பி எல் ஏ) என்ற கணக்கில் வைக்கப்படும். முதலீட்டாளர்களுக்கு சர்டிஃபிகேட் ஆஃப் ஹோல்டிங் இதற்காக வழங்கப்படும்.

8.

பணம் செலுத்தும் முறை

இந்தப் பத்திரங்களுக்கான சந்தாவை பணமாக (20 ஆயிரம் ரூபாய் வரை மட்டும்) அல்லது டிமாண்ட் டிராஃப்ட், காசோலை அல்லது ரிசீவிங் அலுவலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மின் பணப்பரிமாற்ற முறையின் மூலமாக செலுத்தலாம். காசோலைகள் அல்லது டிமாண்ட் டிராஃப்ட், ரிசிவிங் ஆபீஸ் பெயருக்கு விண்ணப்பங்கள் செலுத்தப்படும் இடத்தில் செலுத்தப்படும் வகையில் எடுக்கப்பட வேண்டும்.

 

 

 

9.

திருப்பிச் செலுத்தப்படும் காலம்

வெளியிடப்பட்ட நாளிலிருந்து 7 ஆண்டுகாலம் முடிந்தபின் பத்திரத் தொகை திருப்பி வழங்கப்படும்.  சீனியர் சிட்டிசன்களில் குறிப்பிட்ட வகையினருக்கு முன்னதாகவே தொகையை திரும்பப் பெற அனுமதி உண்டு.

10.

ரிசீவிங் அலுவலகங்கள்

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், குறிப்பிட்ட தனியார் துறை வங்கிகள், நேரடியாகவோ தங்கள் கிளைகளின் மூலமாகவோ அவர்களது முகவர்கள் மூலமாகவோ விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளும்.

11.

வட்டி விகிதம் (மாறுபடும்)

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1,  ஜூலை 1 ஆகிய தேதிகளில் அரையாண்டுக்கு ஒரு முறை வட்டி வழங்கப்படும். 1 ஜனவரி 2021 தேதிக்கான கூப்பனுக்கு 7.15 சதவிகித வட்டி வழங்கப்படும். அதற்கு அடுத்த அரையாண்டு காலத்திற்கான வட்டி விகிதம் 1 ஜனவரி  2021 அன்று நிர்ணயிக்கப்படும். மொத்தமாக வட்டியை செலுத்துவதற்கான அடிப்படையிலான விருப்பத்தேர்வு இல்லை.

12.

வரி விதிப்பு முறை  

இந்தப் பத்திரங்களில் மூலம் கிடைக்கும் வட்டி வருவாய் வருமான வரி சட்டம் 1961படி வரிகளுக்கு உட்பட்டது. அவ்வப்போது திருத்தி அமைக்கப்பட்ட வருமான வரிச் சட்டங்கள்; பத்திரங்களை வைத்திருப்பவரின் வரி அந்தஸ்து, ஆகியவற்றைப் பொறுத்து வரிவிதிப்பு உண்டு.

13.

பரிமாற்றம்

இந்தப் பத்திரங்கள் பாண்ட் லெட்ஜர் கணக்கு வடிவத்தில் இருக்கும். இதை வேறு எவருக்கும் மாற்ற முடியாது. இதற்கு விதிவிலக்கு- கடன் பத்திரத்தை வைத்திருப்பவர் மரணமடைந்தால் அவருடைய நாமினிகள்/ சட்டப்படியான வாரிசுகள்.

14.

நாமினேஷன்

கடன் பத்திரங்களை வைத்திருக்கும் தனிநபர் அல்லது கூட்டுப் பத்திரங்களை வைத்திருக்கும் அனைத்து நபர்களும் தனித்தனியாக விண்ணப்பப்படிவம் சி மூலமாக தங்களின் மறைவுக்குப் பிறகு, யாருக்கு சென்றடைய வேண்டும் என்பதற்காக நாமினி ஒருவரை நாமினேட் செய்யலாம். ஒருவர் அல்லது ஒருவருக்கும் மேற்பட்ட நபர்களையும் நாமினேட் செய்யலாம்.

15.

வர்த்தகம்/ கடன்

இந்தப் பத்திரங்களை செகண்டரி சந்தையில் வர்த்தகம் செய்ய முடியாது. வங்கிகள், நிதி நிறுவனங்கள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் போன்றவற்றிலிருந்து கடன் பெறுவதற்கு இவற்றை பிணையாகவும் அளிக்க முடியாது.

16.

தரகுத்தொகை/ கமிஷன்

ரிசீவிங் அலுவலகங்களுக்கு அவர்கள் திரட்டிய தொகையின் 0.5 சதவிகிதம், தரகுத்தொகை வழங்கப்படும். இவ்வாறு பெறும் தரகுத்தொகையில் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் அவர்களிடம் பதிவு செய்து கொண்டுள்ள தரகர்கள், துணைத் தரகர்கள் ஆகியோருடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்

 

****


(Release ID: 1635009) Visitor Counter : 317


Read this release in: English , Hindi