விவசாயத்துறை அமைச்சகம்

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், ஹரியானா, குஜராத், பஞ்சாப் மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் வெட்டுக்கிளிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன; 11 ஏப்ரல் 2020 முதல் இன்று வரை 1,27,225 ஹெக்டேர் நிலம் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.

Posted On: 27 JUN 2020 9:40PM by PIB Chennai

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், ஹரியானா, குஜராத், பஞ்சாப் மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் வெட்டுக்கிளிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  வெட்டுக்கிளிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக வெட்டுக்கிளி வட்டார அலுவலகங்களின் 60 கள அளவிலான கட்டுப்பாட்டுக் குழுக்களும் 12 ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் பட்டியலிடப்பட்ட பாலைவனப் பகுதிகளில் வெட்டுக்கிளி எச்சரிக்கை அமைப்பும் 10 வெட்டுக்கிளி வட்டார அலுவலகங்களும் மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து வெட்டுக்கிளிக் கட்டுப்பாட்டுக்கான செயல்பாடுகளை எடுத்து வருகின்றன.  மாநில அரசுகள் தங்களது வேளான் துறைகள் மூலமாக பயிரிடப்பட்ட நிலங்களில் வெட்டுக்கிளித் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.  இந்த ஆண்டில் 11 ஏப்ரல் 2020 முதல் இந்தப் பருவத்தில் 26 ஜுன் 2020 வரை 1,27,225 ஹெக்டேர்களில் வெட்டுக்கிளிகளின் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் அனைத்து சட்டப்பூர்வ அனுமதிகளுக்குப் பிறகு வெட்டுக்கிளிகளின் கட்டுப்பாட்டுக்கு ட்ரோன்களைப் பயன்படுத்தும் முதல் நாடாக இந்தியா விளங்குகிறது.  அதிக அளவு மூலவளங்கள் உள்ள ராஜஸ்தானில் முக்கிய தடுப்பு நடவடிக்கைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. பயிரிடப்பட்டுள்ள பகுதிகளில் டிராக்டரில் பொருத்தப்பட்ட தெளிப்பான்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்களை அதிக எண்ணிக்கையில் மாநில அரசுகள் வெட்டுக்கிளி கட்டுப்பாட்டுக்காக பயன்படுத்தி வருகின்றன.


(Release ID: 1634970)
Read this release in: Punjabi , English , Hindi , Manipuri