புவி அறிவியல் அமைச்சகம்
அடுத்த 4-5 நாட்களில் இந்திய தெற்கு தீபகற்பத்தின் பல பகுதிகளில் ஓரளவு பரவலானது முதல் பரவலான மழையும் ஒரு சில இடங்கில் தீவிரமான கனமழை முதல் அதிதீவிர கனமழை வரையிலும் பெய்யக்கூடும்.
Posted On:
27 JUN 2020 8:59PM by PIB Chennai
இந்திய வானிலை ஆராய்ச்சித் துறையின் கீழ் செயல்படும் புதுதில்லியில் உள்ள தேசிய வானிலை முன்கணிப்பு மையம் / பிராந்திய வானிலை மையம் கீழ்வரும் கணிப்பை வெளியிட்டுள்ளது:
♦ கர்நாடகாவின் கடற்கரைப் பகுதியில் இருந்து லட்சத்தீவு – மாலத்தீவு பகுதி வரை சராசரி கடல் மட்டத்தில் கடற்கரையில் இருந்து தொலைவில் கடலிலும் சராசரி கடல் மட்டத்துக்கு மேல் 3.1 கிமீ முதல் 5.8 கிமீக்கு இடையில் 11° என அட்சரேகைக்கு இணையாக கிழக்கு-மேற்கு திசையில் ஒரு குறுகிய பிளவு மண்டலம் நீண்டு இருக்கிறது. இந்த தாக்கத்தின் கீழ் அடுத்த 4 முதல் 5 நாட்களில் இந்தியத் தெற்கு தீபகற்பத்தின் பல பகுதிகளில் ஓரளவு பரவலானது முதல் பரவலான மழையும், ஒரு சில இடங்களில் தீவிரமானது முதல் அதிதீவிரமான நிலைவரையும் மழை பெய்யக் கூடும்.
♦ இந்தக் குறுகிய பிளவு வடக்கு நோக்கி நகர்வதால் வங்காள விரிகுடாவில் இருந்து வரும் தெற்குமுக / தென்கிழக்கு முகமான காற்று வலுவாக வடகிழக்கு, அதையொட்டிய கிழக்கு இந்தியா மீது ஒன்று சேர்கிறது. எனவே வடகிழக்கு, கிழக்கு இந்தியாவை ஒட்டிய பகுதிகளில் ஆங்காங்கே தீவிர மற்றும் அதி தீவிர மழை அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு தொடரக்கூடும். மேலும் அடுத்த 24 மணி நேரத்துக்கு இமாலயா அடிவாரம், மேற்கு வங்கம், சிக்கம், அசாம், மேகாலயா ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே அதிதீவிர கனமழை பெய்யக்கூடும்.
♦ அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு கிழக்கு உத்திரப்பிரதேசத்தில் ஓரளவு பரவலானது முதல் பரவலான மழையும் ஆங்காங்கே கனமழையும் பெய்யக் கூடும்.
(Release ID: 1634968)
Visitor Counter : 165