அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
பழங்கற்காலப் பருவநிலை குறித்த வரலாற்றை சிந்து நதியின் சரளைக்கல் வடிவவியல் வெளிப்படுத்துகிறது
Posted On:
25 JUN 2020 2:09PM by PIB Chennai
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் தன்னாட்சி நிறுவனமாகச் செயல்படும் டேராடூனில் உள்ள இமாலய புவி அமைப்பியலுக்கான வாடியா நிறுவனம் (Wadia Institute of Himalayan Geology - WIHG) லடாக்கின் இமாலயா பகுதியில் சிந்து நதியின் பழங்கற்காலப் பருவநிலை குறித்த வரலாற்றை தடம் அறிந்துள்ளது. கால்வாய்ப் படிவுகளில் ஒன்றின் மேல் ஒன்றாக உள்ள சரளைக் கற்களின் வடிவவியல் தரவுகளின் உதவியோடு இது கண்டறியப்பட்டுள்ளது.
கசடுகள் படிதல் மற்றும் அதன் ஊடுருவுதல் காரணமாக நிலத்தின் உயரம் கடல் மட்டத்தை விட அதிகமாகும் காலகட்டங்களின் போது நதியில் இருந்து வெளியேறும் நீர்ப்பாய்வுகளை இந்த நிறுவனம் ஆய்வு செய்தது.
லடாக் இமாலயப் பகுதியில் அண்மைக்கால நான்காவது காலகட்டத்தில் (புவி வடிவமைப்பியல் காலவரிசையில் மூன்று காலகட்டங்களோடு ஒப்பிட மிக அண்மையானதும் தற்போது இருப்பதுமான காலகட்டம்) சிந்து நதியின் நிலப்பகுதி உயர அளவு அதிகரிப்பு மற்றும் ஊடுருவல் ஆகியவற்றை நீர்ப்பாய்வு காலகட்டங்களில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். 47-23 கே.ஏ (ஆயிரம் ஆண்டுகள்) என்ற நிலையில் நதியின் நிகரப்படிவு மூலமான உயர அதிகரிப்பு காலகட்டத்தில் பழங்கற்கால நீர்ப்பாய்வுகளைக் கணக்கிடுவதற்காக கால்வாய்ப் படிவுகளில் ஒன்றின் மேல் ஒன்றாக உள்ள சரளைக் கற்களின் வடிவவியல் தரவுகளை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தியுள்ளனர். நிகர நதி ஊடுருவல் காலகட்டத்தின் போது பழங்கற்கால நீர்ப்பாய்வுகளைக் கட்டுப்படுத்துவதற்காக 14-10கே.ஏ என்ற நிலையில் அலையற்ற நீர்ப்படிவுகள் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்ததையும் ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.
*****
(Release ID: 1634272)
Visitor Counter : 218