அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
விண்வெளியில் முக்கிய வானிலை நிகழ்வுகளின் போது தகவல் தொடர்பு நேவிகேஷன் முறைகளை பாதிக்கின்ற அயனி மண்டல ஒழுங்கின்மைகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்
प्रविष्टि तिथि:
22 JUN 2020 6:46PM by PIB Chennai
காந்த பூமத்திய ரேகை பகுதிக்கு மேல், பூமியின் காந்த அலைகள் கிட்டத்தட்ட படுக்கைவாட்டில் இருக்கின்றன. இதன் காரணமாக பூமத்திய ரேகை அயனி மண்டலம் பல்வகையான பிளாஸ்மா நிலையற்ற தன்மைக்கான படுக்கையாக உள்ளது. இதனால் பிளாஸ்மா இடையூறுகளும், ஒழுங்கின்மையும் ஏற்படுகின்றன. இந்த பிளாஸ்மா ஒழுங்கின்மை காரணமாக, தகவல் தொடர்பு மற்றும் நேவிகேஷன் முறைகளில் பல தீவிரமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் கண்காணிப்பு செயல்பாடுகளில் குறுக்கீடுகள் ஏற்படுகின்றன. விமானங்கள், ஏவுகணைகள், செயற்கைக் கோள்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணிப்பது; அவற்றில் ஏற்படும் இடையூறுகளைக் கண்டறிவது ஆகியவற்றிலும் பிரச்னைகள் ஏற்படுகின்றன.
இந்தியாவில் விண்வெளியில் ஏற்படும் வானிலை சூறாவளி குறித்து பல கருவி அடிப்படையிலான அயனி மண்டல ஆய்வை, மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறையின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பான இந்திய புவி காந்தவியல் கழகத்தின் அறிவியலாளர்கள் மேற்கொண்டனர். புவி காந்தப் புயல் உருவாகத் தொடங்கும் நேரத்தைப் பொறுத்து, இந்தப் புவி காந்தப் புயலினால் ஜிபிஎஸ் கிளர்ச்சிகள் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றன என்றும், பூமத்திய ரேகை பகுதி பரவல் ஒழுங்கின்மை (equatorial spread F irregularities (ESF) பாதிக்கப்படுகின்றன என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
F மண்டல பிளாஸ்மா ஒழுங்கின்மையினால் ஏற்படும் பூமத்திய ரேகை பகுதி பரவல் ESF என்பது மிகவும் சிக்கலான ஒரு அம்சமாகும். மின்னணு, அயனி கிளர்ச்சிகள், மின் புலங்கள் ஆகியவற்றிலும் அதிக அளவிலான ஒழுங்கின்மையை இவை ஏற்படுத்தும். VHF GPF ரிசீவர்களில் அயனி மண்டலத்தில் இருந்து ரேடியோ அலைகள் பயணிக்கும்போது, அயனி மண்டல கிளர்ச்சியையும் இவை உருவாக்குகின்றன.
மேலும் விவரங்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1633389
(रिलीज़ आईडी: 1633425)
आगंतुक पटल : 306